Saravanakarthikeyan Chinnadurai : · என் புரிதல் ராஜீவ் படுகொலையின் execution-ல் பேரறிவாளனுக்குப் பங்குண்டு. இங்கே சீசனலாக அல்லது ஃபேஷனுக்காக அரசியல் பேசும் நடிகர்கள், இயக்குநர்கள் சொல்வது போல் அவர் அப்பாவியோ நிரபராதியோ அல்ல. அதாவது ராஜீவை வெடித்துக் கொல்லப் பயன்படவிருக்கின்றன எனத் தெரிந்தே தான் அவர் 9-வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதே பல கட்டுரைக் குறிப்புகளையும் பேட்டிகளையும் உள்வாங்கிய பின் நான் உணர்ந்து கொண்ட சாரம். ஆனால் 1991 முதல் இன்று வரை மொத்தம் 29 ஆண்டுகள் - இரட்டை ஆயுள் தண்டனைக்கும் மேலான கால அளவு - சிறையில் தன் இளமைக் காலம் முழுக்க, ஆயுளின் மூன்றில் ஒரு பங்கைக் கழித்து விட்டார்.
ராஜீவ் கொலையில் பேரறிவாளன் நேரடிச் சதிகாரர் அல்ல என்பதையும் குற்றத்தின் அளவையும் வைத்துப் பார்க்கும் போது அவர் உரிய தண்டனையை அனுபவித்து விட்டார் என்றே எண்ணுகிறேன். எஞ்சியிருக்கும் வாழ்நாளையேனும் அவர் சுதந்திரமாய்க் கழிக்க வாய்ப்பளிக்க வேண்டும். இந்தத் தேசம் அவரை மன்னிக்க வேண்டும்.
Sugan Paris : · ராஜீவ் கொலையில் சம்பந்தமில்லையென்று வாதிடுவதைவிட, அந்த நெற்வேர்க்கில் இணைக்கப்பட்ட அந்த எழுவர் அவர்கள் சிறையில் கழித்த நெடிய காலத்தைக் குறித்து மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரும் வேண்டுகோள்கள் எதுவும் தமிழ்நாட்டில் இன்றுவரை இல்லை.
நிரபராதிகள் என்ற ஒரு தர்க்கத்தை வைத்தே இன்றுவரை வாதிடுகின்றார்கள். இதுவே அவர்கள் விடுதலைக்கு எப்போதும் சிக்கலாகிவிடுகிறது. சட்ட நோக்களுக்காக உள்ளேயும் வெளியேயும் வெளிப்படைத்தன்மை இல்லை. உங்கள் இந்தப் பதிவு முக்கியமானது. ஆனால் வெளியே இருப்பவர்கள் அந்தக் கொலையை நியாயப்படுத்தும் போக்கே அன்றைய ம க இ க தொடங்கி இன்றைய சீமான் வரை பெருமையோடு முன்வைக்கப்படுகிறது.
இதுவும் அவர்கள் விடுதலைக்கு ஒரு சிக்கலைக் கொடுக்கின்றது.ஆனால் தமிழ்நாட்டின் மையப்போக்கு புலிகளின் கொலைக்கலாசாரத்துக்கு ஆதரவான மனநிலையையே இன்றுவரை கொண்டிருக்கிறது,
அதை அவர்கள் மீளாய்வு செய்யத் தயாரில்லை.
Chinniah Rajeshkumar : அவர்களின் தண்டனை இவர்களுக்கு கோஷ அரசியல் . ஆனா என்னை பொறுத்தவரை 9 வால்ட்ஸ் பட்டரி வாங்கி கொடுத்ததனால் பேரறிவாளனுக்கு தெரிந்திருக்கு ம் என்பது ஊகமே.
புலிகள் அமைப்பில் இருந்த பெரும் ஆட்களுக்கு கூட தெரிந்திருக்காது. பிரபாகரன் பொட்டன் மற்றும் காரியத்தில் நேரடியாக இறங்கியவர்களுக்கு மட்டுமே முன்கூட்டி தெரியும்.
David Krishnan : எது எப்படியோ இந்த தண்டனை போதும் என்பதே எனது கருத்து வெளியே இருப்போரின் திமிர் பேச்சும் அவர்கள் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உன்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக