இவ்வட்டார ஒத்துழைப்பு.. வர்த்தகம்.சுற்றுலா..பாதுகாப்பு..இப்படி அனைத்திலும் ஒற்றுமையாக வரி. சலுகையுடன் பரஸ்பர நாடுகளுக்குள் தடையற்ற. வர்த்தகம் நிலவுவதால் மக்கள்
பயணம் செய்வதிலும் ..கல்வி வேலை வாய்ப்பு பெறுவதிலும்
நல்ல வாய்ப்பு பெறுகின்றனர்.
சிங்கப்பூர் பிரதமராய் இருந்த காலன்சென்ற லீ குவான் யூ
இந்த நாடுகளில் இந்தியாவையும். சீனாவையும் இனைத்து பெரும் சக்தியாக்கி காட்ட நினைத்து. காலன்சென்ற நரசிம்மராவ் பிரதமராய் இருந்தபோது தன் இந்திய விஜயத்தில் இதுபற்றிய தன் என்னத்தை சொன்னார் திரு லீ. இதன் சாதகத்தையும் எதிர்காலத்தில் இந்திய மக்களின் நன்மை கருதியும்..ASEAN நாடுகளின் பங்காளி நாடுகளாக இந்தியாவும்..சீனாவும் சேர்ந்தது.நரசிம்மராவ் சிங்கப்பூர் வந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அதன் பின் இந்திய பொருட்கள் தாராளமாக இவ்வட்டாரத்துக்குள் விற்பனைக்கு வர ஆரம்பித்தது. ஹல்திராம் தொடங்கி. ஆச்சி மசாலா வரை கிடைற்றது. இந்த அமைப்பின்
வெற்றி.. ஆஸ்ட்ரேலியா..நியூஸிலாந்து தென் கொரியா ஆகியவையும் சேர தூண்டி அவர்களும் பங்காளிகளாக இனைந்து
இந்த அமைப்பின் SERP
எனப்படும் தடையற்ற வர்த்தக உடன் பாட்டில் கையெழுத்திட
சென்ற ஆண்டு இந்தியா மறுத்தது! இந்த ஆண்டு அதிலிருந்து இந்தியா மட்டும் விலகியே விட்டது!
இதற்கு இந்தியா சொல்லும் நொண்டி காரணம்.. இந்த உடன் பாட்டில் கையெழுத்திட்டால்..சீன பொருட்கள் இந்தியா உள்ளே நுழைந்து விடும்! ஆஸ்திரேலியாவில் இருந்து பால் பொருட்கள் வந்து இந்திய விவசாயிகளை பாதிக்கும் ! என.
ஆனால். இந்த நாடுகள் தங்கள் மூத்த சகோதரனாக நினைத்த இந்தியா இப்படி செய்யும் என எதிர்பார்க்கவில்லை! இனி இந்த நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி போட்டால்
நிலமை என்ன? பொருட்கள் விலை தாறுமாறாக ஏறும்..பொருட்களை இறக்குமதி செய்ய வியாபாரிகள் தயங்குவார்கள்
இந்திய ஏற்றுமதி குறையும்
அன்னிய செலாவனி அம்பேல்..இந்த நாடுகளும் இனி இந்தியாவுக்கு தங்கள் எந்ற்றுமதிகளில் கட்டுப்பாடு விதிக்கும்
நரசிம்ம ராவ். காலத்தில் இருந்து. எல்லாவித இந்திய பொருட்களையும் பார்த்து மகிழ்ந்த நாம். இனி இந்த மோடி ஆட்சியில் பொருட்களை போட்டோவில் பார்க்கும். நிலைதான் வரும் போல!
குரங்கு கையில் பூமாலையாய் நாடு சிக்கி தவிக்குது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக