புதன், 18 நவம்பர், 2020

NEET ஐத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வு


   M. K. Stalin : நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்-ஐத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி இருப்பது ஏன்? தனியான இடஒதுக்கீட்டு முறை எதற்கு? வெண்ணெய் ஒரு கண்ணில்; சுண்ணாம்பு மறு கண்ணிலா?
தமிழகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்!
மேலும்,  மருத்துவ உயர் சிறப்புப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்இடஒதுக்கீடைப் போராடிப் பெற்றோம்.
அரசாணை வெளியிட்டு 10 நாட்கள் கடந்தும் கலந்தாய்வு நடத்தத் தாமதிப்பது யாருக்குப் பயந்து?
தமிழக இடஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் 50%-க்கான கலந்தாய்வை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக நடத்திட வேண்டும்!

கருத்துகள் இல்லை: