இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும்
அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி
முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து 4,500 முதல் 2,500 ராணுவ வீரர்களை
வாபஸ் வாங்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் ஈரானில்
இருந்தும் ஜனவரி 15ம் தேதிக்குள் படைகளை வாபஸ் வாங்கி மீண்டும் அமெரிக்கா
கொண்டு வர டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். அங்கு இருக்கும் 3000 படைகளில்
2500 பேரை டிரம்ப் வாபஸ் வாங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
டிரம்ப்
பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக
பென்டகனின் புதிய பாதுகாப்பு செயலாளராக கிறிஸ்தபர் மில்லர் கொண்டு வரப்பட்ட
பின் இந்த அதிரடி மாற்றங்கள் நடக்கிறது. டிரம்ப் எடுக்கும் தவறான முடிவு
இது என்று பென்டகனின் முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக