புலம்பெயர் முற்போக்கு இடதுசாரிகள் பலரும் உள்ளூர பாஜக ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள் ..இது நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமான விடயம்தான் . இதை அவர்கள் பெரிதும் நேரடியாக கூற மாட்டார்கள் . ஆனால் எப்பொழுது பாஜக வெற்றியை பெறுகிறதோ அப்போதெல்லாம் அந்த வெற்றி எப்படி வந்தது என்பதை விலாவாரியாக எழுதி பாஜகவின் அந்த வெற்றிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுப்பதில் மிகவும் சிரத்தையாக முயல்வார்கள்
உலகம் முழுவதும் வலது சாரிகள் வெற்றி பெற்று கொண்டிருப்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்றெல்லாம் அக்கறையோடு கூறுவது போல வகுப்பு எடுப்பார்கள்.
தப்பி தவறியும் பாஜகவின் வெற்றிகள் அத்தனையும் கொலை கொள்ளை திருட்டுத்தனம் மொள்ளைமாரித்தனம் வாக்கு இயந்திர மோசடி என்று கூற மாட்டார்கள் . அப்படி யாராவது கூறினாலும் வேடிக்கையாக அதை ஒதுக்கி தள்ளிவிட்டு . தோற்றுபோனவர்கள் வழக்கமாக கூறும் வாதங்கள் இவைதான் என்று கூறுவார்கள் ..
இந்த போலி முற்போக்கு இடது சாரிகள் பெரிதும் புலம் பெயர் இலக்கிய வாதிகள் கவிஞர்கள் மனித உரிமை மைய்யவாதிகள் போன்று தோற்றம் காட்டுவார்கள் .
இவர்களின் தமிழக அரசியல் தொடர்புகள் பெரிதும் பார்ப்பன ஊடகங்களை சார்ந்தே இருக்கும் . வாழ்க இவர்களின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் தர்க்கீக பொருள்முதல் வாதம் பித்தவாதம் இத்தியாதி இத்தியாதி
இதில் தமிழ் தேசிய சீமாந்திகளை கணக்கில் சேர்க்கவில்லை அவர்களும் பச்சை சுய ஜாதி அபிமானிகள்தான் ,
எனினும் அவர்கள் பெரிதும் பாசிஸ்டுகள் அல்லது அரைவேக்காடுகள்
இவர்கள் எல்லோரிடமும் உள்ள ஒரே ஒரு பொதுவான அம்சம்...
இவர்களுக்கு திமுக என்றால் வேப்பங்காய் ..
ம்ம்ம் சுய ஜாதி அபிமானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக