விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் மெயின் வில்லனாக நடித்து வந்தார். மேலும் சில தொடர்களில் நடித்துள்ளார். கொரோனா பயம் காரணமாக விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மனைவி மற்றும் குழந்தைகளை தங்க வைத்தார். அவர்கள் அங்கு வசிக்கின்றனர்.
செல்வரத்தினம் மட்டும், எம்.ஜி.ஆர் நகரில் தங்கியிருந்து டிவி தொடரில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டின் அருகே, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த நான்கு பேர், திடீரென செல்வரத்தினத்தை சூழ்ந்துகொண்டு, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
அவர் சுதாரிப்பதற்குள் இந்தக் கொலை சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இதில் ரத்தவெள்ளத்தில் மிதந்த செல்வரத்தினம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் வெட்டியவர்கள், தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்காதல் பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
விருதுநகரைச்
சேர்ந்த தனது நண்பர் மனைவியுடன் செல்வரத்தினம் தொடர்பில் இருந்ததாகக்
கூறப்படுகிறது. இதை நண்பர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், அவர் ஆட்களுடன்
வந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த
நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக