வியாழன், 19 நவம்பர், 2020

கம்யூனிஸ்டு ஜோதி பாசுவை பிரதமராக விடாமல் தடுத்த பிரகாஷ் காரத் .... (சமூக வலை வைப்பிறேசன்ஸ்)

Chozha Rajan : · இப்போதும் என்னை உறுத்தும் ஒரே விஷயம் பிரகாஷ் காரத்... எந்தக் காலத்திலும் கிடைக்காத பிரதமர் பதவியை காங்கிரஸ் உள்பட எல்லோரும் தட்டில் வைத்து கொடுத்தபோது, ஜோதிபாசுவுக்கு கிடைக்கவிடாமல் செய்த பாவி... ஜோதிபாசுவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜோதிபாசுவும் இந்தியா முழுமைக்கும் அறிமுகமாகி இருக்கலாம்... ஒரே ஒரு மக்கள் நலச் சட்டத்தை இயற்றியிருந்தால் அல்லது முயற்சி செய்து தோற்றிருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மனதில் நின்றிருக்கும்... பாஜகவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது... 

Abdul Rahim : எனக்கும் அந்த வருத்தம் உண்டு. 

அகரம்சேரி ப.ச.  சுரேஷ்குமார் :  உண்மையான கருத்து..கம்னியூஸ்டிலும் பார்ப்பனியம்..அதுவே காரணம்... 

Chozha Rajan : அது அல்ல. அப்படிப் பார்த்தால் ஜோதிபாசு யார்?

குமார்தாஸ் பேரையூர்குமார் : T K ரங்கராஜன் ( 10% உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கீட்டை கடுமையாக ஆதரித்தவர்) 

அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமார் : பார்ப்பனியர்(இனம்)என்பது வேறு..பார்ப்பனியம்(சூழ்ச்சி) என்பது வேறு..

Natarajan Sivaguru அதற்கு பிறகு UPA 2 ஆதரவு வாபஸ் வாங்கியது... 

Chozha Rajan : அது கொடுமையிலும் கொடுமை. கம்யூனிஸ்ட்டுகள் சொன்னதையெல்லாம் கேட்ட அந்த அரசை, பெட்ரோல், ரயில்கட்டணத்தை ஏற்றாமல், 100 நாள் வேலை உத்தரவாதத்தை கொடுத்த அந்த அரசை, வெட்டித்தனமான ஒரு காரணத்தைக் காட்டி கவிழ்க்க முயன்று தோற்று, காங்கிரஸை மம்தாவுடன் கூட்டணி அமைக்கவி்ட்டு, மேற்கு வங்கத்தை இழந்து... கொடுமை தோழர்... · 

Natarajan Sivaguru : . எல்லாவற்றையும் ஏற்க இயலாது 

Chozha Rajan : அது உங்கள் நிலைப்பாடு தோழர். ஆனால், அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு என்பது ஒரு வெற்றுக்காரணம் என்பது எனது கருத்து. அடுத்து அது நிறைவேறாமல் போயிற்றா என்ன? ·

 Natarajan Sivaguru : அதைத்தான் நானே ஒப்புக்கொண்டேனே Rajaiah Manuvel : இந்தியாவில் கம்யூனிசத்தை அழிப்பதற்காகவே கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள் என்று சொன்ன பெரியார் வார்த்தையை நிரூபித்து காட்டியவர் காரத். 

 Chozha Rajan : காப்பாற்றத் துடிக்கும் லட்சக்கணக்கான தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள் தோழர்... 

 Rajaiah Manuvel : இருக்க வேண்டும் என்பதுதானே நம் போன்றோர் எண்ணமும்.... 

கண்ணன் இரா : பழையபாசமா. 

Chozha Rajan : எப்போதுமே எனக்கு கம்யூனிஸத்தின் மீது ஈர்ப்பு உண்டு. இங்குள்ள நடைமுறைகள் மீது கருத்து வேறுபாடும் உண்டு. தந்தை பெரியாரை சந்திக்கவில்லை என்றால் நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டமன்றம் அமைந்ததை வருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்... கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கானவர்கள்... 

Rajaiah Manuvel : திமுகவில் உள்ள கொள்கையாளர்கள் யாரும் பொதுவுடமையை மறுப்பவர்களாக இருக்க மாட்டார்கள். 

Alphonse Ronimus : பிரகாஷ் காரத் ஒரு பிராமண சங்கியே 

Shivakumar Lakshmanan : அந்தக்கால ஸ்லீப்பர் செல் 

 Chozha Rajan : ஸ்லீப்பர் செல்களில் பலவிதம். சசிகலா வெளியே வரும்போது எத்தனை ஸ்லீப்பர் செல்களோ... அதைத்தான் தமிழகம் எதிர்பார்த்திருக்கிறது... 

 Shivakumar Lakshmanan : எனக்கு தெரிந்தவரை ஓபிஎஸ் தவிர இபிஎஸ் உட்பட பூராவும் ஸ்லீப்பர் தான் 

Thiruvarur T. Thiruvengadam :  தெரியாதது மாதிரி பேசலையே. கம்யூனிஸ்ட் கட்சியில் தனது சாதியை பற்றி கவலையில்லாதவரகள் ஏராளமாக இருக்கிறார்கள். பிராகாஷ் காரத் கட்சியின் சட்டவிதிகளை காட்டியே ஜோதிபாசு பிரதமராவதை தடுத்தார். மாபெரும் தலைவரான ஜோதிபாசு அதை தலைவணங்கி ஏற்றார். ஆனாலும், இந்த முடிவு ஒரு இமாலயத் தவறு என்று சொன்னார். அது நிஜமாயிற்று. காரத் மூஞ்சி உடைந்தது... 

Alphonse Ronimus : ஜோதிபாசுவும்பெரிய அளவிற்கு ஆசைப்படவில்லை 

Shaik Sulaiman : சிஐஏ சிலிப்பர்செல் 

Chozha Rajan : கம்யூனிஸ்ட்டுகள் ஆசைப்படக்கூடாது. ஆனால், இதை ஏற்கலாம் என்று ஜோதிபாசுவும், சுர்ஜித்தும் வேறு சிலரும் சொன்னார்கள். சில உறுப்பினர்களின் கூடுதல் எதிர்ப்பால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கட்சியின் பெரும்பான்மை முடிவை ஏற்பதாக சொன்னாலும், இதை இமாலயத் தவறு என்றார் ஜோதிபாசு...

Chozha Rajan : ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பெர் செல் என்பதுதான் சரியாக இருக்கும்... அகரம்சேரி ப.ச. 

சுரேஷ்குமார் : இதைத்தானே அண்ணா நாங்கள் பார்ப்பனியம் என்றோம்... 

 Chozha Rajan : கம்யூனிஸ்ட் கட்சி பார்ப்பனீயம் என்ற தொனி இருந்தது. கட்சிக்குள் சில சாதி வெறியர்கள் இருக்கலாம். அதுக்காக, கட்சியையே அப்படி மதிப்பிடக்கூடாது. 

Alagarasan Veerabathran : கட்சி எப்பிடி இருந்தா என்னா?.. மூளை என்னங்குறதுதான் முக்கியம் ..பொலிட் பீரோ பூராவும் பூணூல் சப்போர்ட்டுதான் .. 

 Prabhu : சிலீப்பர் செல்லா தோழர்...? பாஜகவோடு கூட்டணி வைத்த கலைஞரும் ஆர்எஸ்எஸ் சிலிப்பர் செல்லா..?

Prathaban Jayaraman : பொலிட்பீரோ பற்றிய 1% அறிதல் இருந்தாலே இந்த மாதிரி எழுதமாட்டீங்க..! .. 

Tha Mu : ஆர் எஸ் எஸ் மோடியை அறியணை ஏற்றியதில் முக்கியமான பங்கும் அதே நபருக்கும் தான் பார்ப்பன பாசம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் 

Rajnarayanan Veeraiyan : ஜோதிபாசு வங்கத்தை பல்லாண்டுகள் ஆண்ட போதும் அது பார்ப்பனருக்காக தான் இருந்தது. கொல்கத்தா சரி பாதி அக்ரஹாரம் சேரி போல தான் இப்பவும் இருக்கிறது. அவர் பிரதமர் ஆகியிருந்தால் செயல்படாத ஆளாக தான் இருந்திருப்பார் 

Chozha Rajan : நான் அதற்குள் போகவில்லை. நல்ல வாய்ப்பை கெடுத்து பாஜகவுக்கு அதைக் கொடுத்ததைத்தான் பேசுகிறேன். 

கே.வி.ராஜ்குமார் : ஒருவகையில் பாசிசமும் பார்ப்பனீயமும் சேர்ந்த கலவையாக மார்க்சீய கம்யூனிஸ்ட் என்ற நிலை இருக்குமோ? ·

 Mohamad Aathil : கம்யுனிஸ்ட் இருந்தாலும் பார்பன் பார்பன் தான் · 

 Sheik Abdulla : உயர் சாதிக்கான 10% இடஒதுக்கீட்டை ஆதரித்ததும் இவர்களே.


கருத்துகள் இல்லை: