வெள்ளி, 20 நவம்பர், 2020

அது திரித்துவிடப்பட்ட தகவல்... பூங்கோதை ஆலடி அருணா விளக்கம்!

 nakkeeran  :  நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், பூங்கோதை ஆலடி அருணா, உடல்நலக்குறைவால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து பூங்கோதை ஆலடி அருணா விளக்கமளித்துள்ளார். அதில், "தான் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெளியான தகவல்கள் பொய்யானது. அது திரித்துவிடப்பட்ட தகவல்கள். திடீரென ஏற்பட்ட மயக்கதிற்கான காரணத்தைக் கண்டறிய சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருக்கிறேன். சர்க்கரை அளவும், ரத்தம் உறையும் தன்மையும் குறைவாக உள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது" இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்

 

கருத்துகள் இல்லை: