குமரிக் கிழவனார் : ·
மூக்குத்தி அம்மன் என்ற பெயரில் படம் எடுப்பது அதை அரைவேக்காடுத்தனமாக காட்டுவது உங்கள் விருப்பம் பாலாஜி அதை எதற்கு எங்கள் ஊரில் வந்து காட்டுகிறீர்கள்.. ......?
சங்கிகள் எழுதி தள்ளும் அதே விசத்தைதான் இந்த படத்தில் இருபதாவது நிமிடத்தில் காட்டுகிறார்.அதாவது ஒரு காட்சியில் பள்ளிக்கு செல்லம் தங்கையின் பெயர் மாற்றபடுவது போலவும் அவர் கிறுத்தவ வழக்கங்களை பின்பற்றுவது போலவும் காட்டுகிறார் அதாவது கல்வி கொடுக்கிறோம் என்ற பெயரில் மதமாற்றம் நடைபெறு வாய்ப்புகள் இருப்பதுபோலவும் காட்டுகிறார்!
கிறுத்தவம் இங்கு கல்வி கொடுக்க தொடங்கி 211 ஆண்டுகள் ஆகிறது குமரி மாவட்ட ஆளுமைகளாக பார்க்கபடும் பலரும் கல்வி பெற்றது கிறுத்தவ பள்ளிகளில் தான். நான் படித்த பள்ளியில் நான் மூன்றாவது தலைமுறை மகனின் கல்வி குமரிமாவட்டத்தில் இருக்குமானால் அவன் நாலாவது தலைமுறையாக அங்குதான் படிப்பான். எனது காலத்திலோ எனது அப்பனின் காலத்திலோ அல்லது எனது தாத்தன்களின் காலத்திலோ பள்ளியில் மதமாற்றம் நடந்த சம்பவங்கள் இல்லை சோறு போட்டும் யாரும் மதமாற்ற படவில்லை!
குமரியில் மட்டும் குறைந்தது இருநூற்றியம்பது கல்வி நிறுவனங்கள் கிறுத்தவர்களால் நடத்த படுகிறது. கார்மலிலும், ஸ்காட்டிலும், மரியகொரட்டியிலும் கல்வி பயின்று விட்டு முழு சங்கியாக சுற்றும் நூறு பேரை என்னால் காட்ட முடியும் பள்ளிகள் மதமாற்றிய ஒரு பத்துபேரை காட்டுங்க பார்ப்போம்........? இவர்கள் மதம் மாற்றுகிறார்கள் மதம் மாற்றுகிறார்கள் என்று கதறும் பெந்தகோஸ்த்து ஆட்கள் அதிகமாக மதம் மாற்றியதே கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த கிறுத்தவர்களை என்பதாவது தெரியுமா பாலாஜி போன்ற அரைவேக்காடுகளுக்கு........?
அடுத்து படத்தில் அவர் காட்டும் குடும்பம் நாஞ்சில் வெள்ளாளர் குடும்பம் நாலுபெயர் ஒரு வீடு காட்டிவிட்டால் எப்படிப்பா அது நாஞ்சில் நாட்டுக்கு செட் ஆவும்...? நாஞ்சில் நாட்டு வெள்ளாளனுக்கும் திருப்பதி கோவிலுக்கும் என்ன சம்பந்தம்.....?
மிக முக்கியமானது வெள்ளிமலை என்பது முருகன் கோவில் அதற்கு என்று தனி வரலாறு உண்டு அத மூக்குத்தி அம்மனா மாத்துன சரி அந்த மூக்குத்தி அம்மனுக்கு ஒரு வரலாறு உண்டு அந்த கோவில் எங்க இருக்கானாவது தெரியுமா...? அந்த கோவில் அம்மனிடமிருந்து ஒரு பாப்பான் மூக்குத்திய அடிச்சிட்டு போய் கோவில் வாசல் நிரந்தரமாக பூட்டபட்ட கதை தெரியுமா.......?
அடுத்து இரண்டு காட்சியில் மலையாளிகளை உலவ விட்டிருக்கிறார் அடேய் எங்கள் ஊரில் இவ்ளோ சுத்தமால்லாம் எவனும் மலையாளம் பேச மாட்டான் வெறும் இரிக்கினு போவுனு தான் மத்திய கேரளத்தில் மலையாளம் படித்த எனக்கு இவனுவ பேசுறது ரொம்ப ரொம்ப சிரிப்பை தரும். ஒரு சினிமா எடுக்கும்போது கொஞ்சமாவது க்ரவுன்ட் வொரக் பன்னுங்க அப்புறம் கேமராவை தூக்கிட்டு இந்த பக்கம் வாங்க.............
அப்படி யோசிக்காம குமரி கதைகளத்தை தேர்வு செய்வதால் தான் அரபிக்கடலை வங்க கடல்னு சொல்றதும் முட்டத்துல
ரயில் விடுறதும் ஆர்சிக்கும் சிஎஸ்ஐக்கும் வித்தியாசம் தெரியாம வசனம் வைப்பதும் இப்படியாக தமிழ் சினிமா குமரி மாவட்டத்த கொதறி போட்டிருக்கு இதுல குமரில மதமாற்றம் தான் பிரதான தொழில் போல காட்டுவது......
அடேய் அரைவேக்காடு பாலாஜி உனக்கு ஒரு சவால் தம்பி....
அம்மன் கோவில்ல கூள் ஊத்துறத குடிக்கும் பத்து பாதிரிமார நான் கூட்டிட்டு வாரேன் எங்க ஊர்கூடி ஆடறுத்து கோவிலில் அசனம் வைக்கும் நாளை சொல்றேன் ஒரு பத்து ஐயர் வாள கூட்டிட்டு வந்து மொத பந்தில சாப்டுட்டு போ பாப்போம்.........
இன்னும் கிழிக்க நெறைய சீன் இருக்கு ஆனா இறுதி காட்சில தங்கதேர் மாதிரி அந்த அரங்கத்துக்குள் நடந்துவரும் நயன்தாராக்காக இத்தோட நிறுத்திக்கிறேன்..............
படம் எடுக்கானுவ படம்.........
அப்புறம் ஒரு நல்ல என்டெர்டெயனர் ப்ரோ படத்த படமா பாருங்க ப்ரோ க்ரூப்புக்கு
தமிழ்நாட்டுல படத்த படமா பாக்காம விட்டதுதான் பிரச்சனைகளின் ஆரம்பமே.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக