திங்கள், 13 பிப்ரவரி, 2017

தலித் வீட்டில் உண்பதை விளம்பரப்படுத்தும் காவிகளின் வேசித்தனம் .. சக மனிதனின் வீட்டில் உண்பது உனக்கு ஒரு தியாகமா? தூ !

Image may contain: 3 people, people sitting
சாதி ஒழிய வேண்டும்,சமத்துவம் பிறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து களப்பணியாற்றுபவர்கள் சாதியத்தை காப்பாற்றத் துடிக்கும் இவர்களைப் போல தலித் வீட்டில் சாப்பிட்டோம் என்று ஃபோட்டோ போட்டு விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.
சில வருடங்களுக்கு முன்பு Sirpi Rajan அய்யா அவர்களுடன் குடியாத்தம் அருகில் மருத்துவர் Ezhilan Naganathan அவர்களின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தேன்.உணவு ஏற்பாடு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தோழரின் வீட்டில்தான்.அங்கு மட்டுமல்ல,மரூர்,மொடையூர் போன்ற பல கிராமங்களில் மருத்துவரின் நிகழ்ச்சியில் உணவு ஏற்பாடு தலித் சமூக தோழர்களின் வீட்டில் செய்யப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.அங்கெல்லாம் அது இயல்பாகவே நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன்.காரணம் மருத்துவரைப் போன்றோர் சாதி ஒழிய வேண்டும்,சமத்துவம் பிறக்க வேண்டும் என்று போராடிய சான்றோர்களின் வழியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்.
ஆனால் இந்த காவிகளோ சாதி கட்டமைப்பை நிலைநாட்ட தங்கள் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளும் அடிமைகளைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்,அவர்களுக்கு விளம்பரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: