ஒரு மணி நேரத்தில் எம்.எல்.ஏக்கள் வெளியேற வேண்டும் -
கூவத்தூரில் போலீசார் எச்சரிக்கை
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அதிரடிப்படை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
வலுக்கட்டாயமாக எம்.எல்.ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசி, வடக்குமண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், மத்திய மண்டல ஐஜி வரதராஜூஆகியோரும் ரிசார்ட்டுக்குள் சென்றுள்ளனர்.
முதற்கட்டமாக கூவத்தூர் விடுதியில் இருந்து எம்.எல்.ஏக்களை தவிர மற்ற அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். அடுத்து ஒரு மணி நேரத்திற்குள் எம்.,எல்.ஏக்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் இல்லையென்றால் வெளியேற்றப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரிசார்ட் உரிமையாளரும் எம்.எல்.ஏக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளார்.நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக