கடும் அமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு துவங்கியது.
இரண்டு முறை பிரச்சனை ஏற்பட்டதால் குரல் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தாமல் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் வாக்களித்தானர். பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி கே.பழனிச்சாமி.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
அடித்து,உதைத்து, சட்டையை கிழித்து எங்களை வெளியேற்றினர் : ஸ்டாலின் ஆவேசம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட அமளியினால் 2 முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3 வது முறையாக 3 மணிக்கு அவை தொடங்குவதற்குள் திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ‘’என் சட்டையை கிழித்துவிட்டனர். நான் எங்கு சென்று முறையிடுவேன்’’ என்று சபாநாயகர் கூறியதால், திமுகவின குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.இதையடுத்து பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் சட்டை களையப்பட்ட நிலையில் குண்டுக்கட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். சட்டை பட்டன்கள் களையப்பட்ட நிலையில், தலை முடி களைந்த நிலையில் வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’சபாநாயகர் வேண்டுமென்றே சட்டையை கிழித்துக்கொண்டார். தெரிந்தோ, தெரியாமலோ நடந்த தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, ஷூ கால்களால் உதைத்து சட்டையை கிழித்து வெளியேற்றினர். இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஆளுநரிடம் முறையிடப்போகிறோம்’’ என்று தெரிவித்தார் நக்கீரன் eran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக