சசிகலாவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் பேசி வருகிறார். அவர் விரைவில் அதிமுகவில் சேருவதாகத் தகவல் வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது. அதை தலைமை முறையாக எங்களிடம் அறிவித்தும்விட்டது. ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திமுகவின் முடிவையே காங்கிரஸும் எடுக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால்,காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறார்.
சசிகலாவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் பேசி வருகிறார். நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசர் விரைவில் அதிமுகவில் சேருவதாகத் தகவல் வருகிறது'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.tamilthehindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக