மெரினா போராட்டத்திற்கு
முகநூலில் ஸ்டாலின் விடுத்த அழைப்பு
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு:
’’இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைதி வழியில் அறப்போராட்டம் தொடங்குகிறது. ஜனநாயக விரோத அரசை அகற்ற நினைப்போர் அனைவரும் திரளவேண்டுகிறேன்.’’
’
ஸ்டாலின் கைது சட்டப்பேரவையில் இருந்து அடித்து,உதைத்து, சட்டையை கிழித்து குண்டுக்கட்டாக திமுகவினர் வெளியேற்றப்பட்டதையடுத்து ஆளுநர் வித்தியாசகரிடம் சென்று முறையிட்டனர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர். பின்னர் மெரினா கடற்கரையில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் காந்தி சிலை முன்பு அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினர். கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பிக்களூம், தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான திமுகவினரும் அங்கு திரண்டனர். இந்த நிலையில், அமைதிவழி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். படங்கள் : அசோக் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக