வியாழன், 16 பிப்ரவரி, 2017

தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு அதிகம்!

ஆளும் அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பு ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு அதிகரிப்பு அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பதால், தமிழகத் தில், ஜனாதிபதி ஆட்சி வருவதற்கான சூழல் அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.,வினர், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவாளர்கள் தனியாகவும் உள்ளனர். இதில், பன்னீர்செல்வத்திற்கு, ஒன்பது, எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.ஆனாலும், 'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என, கவர்னரை சந்தித்து, பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.அதே நேரம், சசிகலா சிறைக்கு போய் விட்ட தால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சட்டசபை கட்சி தலைவராக, சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள் ளார். ஆனால், கவர்னரால் எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. இச்சூழ்நிலையில், கவர்னர் விரைவில், முதல்வர் பன்னீர்செல்வம் அல்லது அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க, வாய்ப்பு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லையேல், இருவருக்கும், ஒரே நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு வாய்ப்பு வழங்கும் போது, பெரும்பான்மையை நிரூபிக்க, இருவரும் தவறினால், சட்டசபைமுடக்கப்படும்.

ஆறு மாதங்களுக்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத் தப்படும். அதன்பின், சட்டசபை தேர்தல் நடத்த, நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

இது போன்ற நிலை ஏற்படுவதை தவிர்க்க, அ.தி.மு.க.,வில் சிலர், இரு தரப்பினரிடமும், பேச்சு நடத்தி வருகின்றனர்.

சமாதானம்: இதை, அடைத்து வைக்கப் பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பலர் ஏற்றுக் கொண்டுள்ள னர். சிலர், சசிகலா குடும்பத்தை விலக்க, எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதனால், முடிவு எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு தப்பினருக்கும் இடையே, சமாதானம் ஏற்படாவிட்டால், ஜனாதிபதி ஆட்சிக்கான சூழலே அதிகம் உள்ளது என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: