சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா இன்று 15ம் தேதி மாலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹரா மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
வழக்கில் குற்றவாளிகளான இளவரசி மற்றும் சுதாகரனும் சரண் அடைந்தனர்.
சசி தரப்பில் சசிகலாவிற்கு சரண்டர் ஆக இரண்டு வார கால அவகாசம் கேட்டனர் அதை நீதிபதி மறுத்துவிட்டார். அடுத்ததாக சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதிக்கவேண்டும் என கேட்டனர் அதற்கும் நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
ஜெயிலில் விஜபி அறை ஒதுக்கவேண்டும் என்று கேட்டனர் அதற்கும் நீதிபதி மறுப்பு தெரிவித்தார். சசி தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து கோரிக்கையும் நீதிபதி நிராகரித்தார்.
அதையடுத்து, சசிகலாவிற்கு கைதி எண் வழங்கப்பட்டது. சசிகலாவிற்கு நம்பர் 3295, இளவரசி 3296, சுதாகரன் 3297 என எண்கள் ஒதுக்கப்பட்டது.
அதையடுத்து சசிகலா சிறைக்குள் அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் அணிந்திருந்த தங்க செயின், தங்க வளையல் உட்பட அணிகலங்களை கழட்டி அவரது கணவர் நடராஜனிடம் கொடுத்தார். பெண்கள் சிறையில் மூவர் அடைக்கப்பட கூடிய சிறை அறையில் சசிகலா மற்றும் இளவரசி தனித்தனியே அடைக்கப்பட்டனர். இருவருக்கும் பளுப்பு நிற கலர் சிறை சீறுடை, நபருக்கு மூன்று செட் வழங்கப்பட்டது. உடனடியாக தனி அறைக்கு சென்று தாங்கள் கட்டி வந்த சேலைகளை மாற்றி கொண்டு, சிறை சீறுடைகளை அணிந்து கொண்டனர். இவர்கள் சிறை அறையில் வெறும் தரையில் தான் படுக்கவேண்டும். அதே அறையில் ஒரு டாய்லெட் உள்ளது. அதை மூவர் பயன்படுத்தி கொள்ளவேண்டும். சசி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் எந்த ஒரு வசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சு துணைக்கு இளவரசியும் உடன் இல்லை. அதே போல் ஆண்கள் சிறையில் சாதாரண அறையில் சுதாகரன் அடைப்பட்டார் அவருக்கு வெள்ளை நிற சீறுடை வழங்கப்பட்டது. அதையடுத்து சசியுடன் வந்தவர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர் லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக