திங்கள், 13 பிப்ரவரி, 2017

எவிடன்ஸ் கதிர்:பன்னீர்செல்வமும் அவரது ஆட்களும் செய்த கொடுமை கொஞ்ச நஞ்சம் அல்ல.... தலித் இளைஞர் நகமுத்து தற்கொலை... குற்றவாளி

kathir.vincentraj : முதலில் சசிகலாவை எதிர்ப்போம்.அடுத்து கண்டிப்பாக பன்னீர் செல்வத்தையும் எதிர்ப்போம்.ஆனால் தற்போது பன்னீர் செல்வதை ஆதரிப்போம் என்கிற நிலைப்பாடு ஆபத்தானது.சசிகலா வெளிப்படையான அராஜக அரசியல்வாதி.ஆனால் பன்னீர் செல்வம் சைலன்ஸ் கில்லர்.பல கோடி சொத்துக்களை ஆட்டையை போட்டார் என்பது எல்லோரும் தெரியும்.ஆனால் அவரும் அவரது ஆட்களும் செய்த கொடுமை கொஞ்ச நஞ்சம் அல்ல.அவரது தம்பி ராஜா, தலித் இளைஞர் நாகமுத்து தற்கொலையின் குற்றவாளி.
இந்த வழக்கினை கடந்த நான்கு வருடங்களாக நடத்தி வருகிறேன்.இந்த வழக்கை வாபஸ் வாங்க அவர்கள் செய்த பேரம், மிரட்டல்,பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல் என்று நிறைய வன்முறைகளில் ஈடுபட்டு உள்ளனர். வேற யாராவது இருந்து இருந்தால் மதுரையை விட்டு ஓடி இருப்பார்கள்.களத்திலிருந்து பன்னீர் செல்வத்தை அணுகுங்கள்.தற்போது இந்த வழக்கில் ஒரு முக்கிய உத்தரவு வாங்க உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறேன்.நீங்கள் எல்லாம் பன்னீர் செல்வதை பாராட்டுகிற போது....சாரி நண்பர்களே உங்களை நினைத்து பரிதாப படுகிறேன்.
முகநூல்பதிவு வின்சென்ட்ராஜ் 

தீக்கதிர் :பெரியகுளம், டிச.12-
தற்கொலை செய்து கொண்ட தலித் இளைஞர் நாகமுத்துவின் உடல் 5நாள் போராட்டத்திற்குபிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக் கம் செய்யபட்டது.பெரியகுளம் அருகே கை லாசப்பட்டியிலுள்ள கைலாச நாதர் கோவிலில் பாரமரிப்பு பணி செய்து வந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து(24) வெள்ளி இரவு தற்கொலை செய்து கொண்டார். இவர் எழுதி வைத்த கடிதத்தில் தனது சாவிற்கு திருப்பணி கமிட்டித் தலைவரும், பெரியகுளம் நகர் மன்றத் தலைவருமான ஓ.ராஜா ( ஒ.பன்னீர்செல்வத்தின் தம்பி) உள்ளிட்ட 7பேர்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். போலீசார் 7பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடுசரி சம்பந் தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. சனிக்கிழமையன்று பிரதேப் பரிசோதனை மேற்கொண்ட பின் வாலிபர் உடலை வாங்க மறுத்து 5நாட்களாக உறவினர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகமுத்துவின் உடல் துர் நாற்றம் வீசத்துவங்கியது. காவல்துறை தேனி மாவட்ட எஸ்பி பிரவின்குமார் அபினபு, திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந் திரன் ஆகியோர் தலைமை யில் பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ள பெரியகுளம் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலை வர் வி.எம். பாண்டியன் உள் ளிட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்தனர். மருத்துவமனையிலிருந்து பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நாகமுத்து வின் உடல் டி.கள்ளிப்பட் டிக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தலைவர்கள் அஞ்சலிடி.கள்ளிப்பட்டி மயாணத் தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர், மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் டி.வெங் கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுல்வேல் ராஜ் மாநிலச் செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.ராஜப்பன், எல்ஆர்.சங்கரசுப்பு, எம்.ராமச் சந்திரன், பி.இளங்கோவன், மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் எஸ்.மொக்கராஜ், சேதுராமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஆறுதல்மாலையில் நாகமுத்து வின் இல்லத்திற்குச் சென்று பெரியகுளம் எம்எல்ஏ ஏ.லாசர், சிபிஎம்.மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் மாநிலச் செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.ராஜப்பன், எல்ஆர்.சங்கரசுப்பு, ஏ.வி. அண்ணாமலை, எம்.ராமச்சந் திரன், எம்.வி.முருகன், எஸ்.ஏ. ராசக், பி.இளங்கோவன், மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் எஸ்.மொக்கராஜ், சி.சடை யாண்டி, சேதுராமன் ஆகியோர் நாகமுத்துவின் தாய்,தந்தை யை சந்தித்து ஆறுதல் கூறி னர். வழக்கில் சம்பந்தபட்டவர் களை கைது செய்யவும், தீண் டாமை வன்கொடுமை சட் டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும் என பெற்றோரிடம் கூறி னர்.

கருத்துகள் இல்லை: