சசிகலாவுக்கு தண்டனை உறுதியான நிலையில், அதிமுகவின் சட்டசபை கட்சித்தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, ஆளுநரை சந்தித்து எம்எல்ஏக்களின் கடிதத்தையும் கொடுத்துவிட்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது சசிகலா சரணடைந்ததையடுத்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா அவரை சிறையில் அடைத்தனர். இவருடன் இளவரசி மற்றும் சுதாகரனையும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இரவு 7.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இவர்களுடன் அதிமுகவின் செங்கோட்டையன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 10 அதிமுக நிர்வாகிகள் உடன் செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக