இந்த வாரம் வெளியான விகடன் வார இதழில் தீபா பற்றிய எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்து விட்டார்கள். நம்மை இத்தனை நாட்களாக முட்டாளாக்கி வந்துள்ளார். படிங்க.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன் இன்னமும் கூட்டம் குவிந்து கிடக்கிறதே… என்ன முடிவில் இருக்கிறார் தீபா?’’
தீபா, மாற்றி மாற்றி முடிவுகளை அறிவிக்கிறார்; ஆனால், தனது நோக்கத்தில் அவர் தெளிவாக இருக்கிறார்.
ஜனவரியில் புதுக்கட்சி ஆரம்பிப்பேன்’ என்று தீபா சொல்லவில்லை. ஆனால், தீபா தரப்பில் இருந்து அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டது.
அதை நம்பி, அ.தி.மு.க-வில் சசிகலாவின் தலைமையை ஏற்காத தொண்டர்கள் தீபா வீட்டு முன் குவிந்தனர். தீபா வீட்டை நோக்கி தினமும் சாரை சாரையாகப் படையெடுத்து வந்தனர்.
ஆனால், ஜனவரியில் தீபா உருப்படியாக எதையும் அறிவிக்கவில்லை. மாறாக, ‘மக்கள் கருத்தைக் கேட்டபிறகு, பிப்ரவரியில் அறிவிக்கிறேன்’ என்று சொல்லி, இன்னும் ‘பெப்’ ஏற்றினார்.
ஆனால், அதன்பிறகு அது தொடர்பான எந்த முயற்சிகளோ… சந்திப்புகளோ தீபா தரப்பில் இருந்து நடக்கவில்லை.
அதை வைத்துப் பார்க்கும்போது, தீபா இப்போதைக்கு அல்ல… எப்போதுமே உருப்படியாக எதையும் செய்ய மாட்டாரோ என்று அவர் ஆதரவாளர்களுக்கே சந்தேகம் வந்துள்ளது. பின்னால் இருந்து இயக்குவதற்கு சிலர் முயற்சித்தது உண்மைதான். தமிழக பி.ஜே.பி-யில் பரபரப்பாக வலம்வரும் சிலர் அதற்குத் தூண்டில் போட்டனர். அ.தி.மு.க-வில் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்காத பழைய தலைகள் சிலவும் தீபாவை வைத்து ஏதாவது காரியம் சாதிக்க முடியுமா என நினைத்தனர். ஆனால், தீபா யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பரபரப்பாக வழக்குத் தொடரும் வழக்கறிஞர் ஒருவர், தீபாவிடம் ‘உங்களுக்குச் சட்டப்படியான வழிகாட்டுதல்கள் அனைத்தையும் செய்து தருகிறேன் என்றும்.. உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறேன்’ என்றெல்லாம் பேசி உள்ளார். அதைக் கேட்ட தீபா, ‘நிச்சயமாகச் செய்யுங்கள்… ஆனால், அதற்கு முன்னால் நீங்கள் சசி அத்தைக்கு எதிராகப் பேசுவது, அவர்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது போன்ற வேலைகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு வாருங்கள்’ என்றாராம். அதிர்ச்சியடைந்து திரும்பிவிட்டார் அந்த வழக்கறிஞர்.’’ அப்படியானால், தீபாவின் நோக்கம் சசிகலாவை எதிர்ப்பது இல்லையா?’’ நிச்சயமாக இல்லை. சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்வதுதான் தீபாவின் நோக்கம் என்றால், இந்நேரம் அவர் பரபரப்பாக வலம்வர ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கில் மெரினாவில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதுகூட, அது பற்றிய எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. நடராசன் சொன்னதும் பலரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ‘தீபாவும் தீபக்கும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள். அவர்களைப் பார்த்துக்கொள்வது எங்கள் பொறுப்பு’ என்று. இதை வைத்தே பலரும் தீபா மீது சந்தேகம் கிளப்புகிறார்கள். தீபாவுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. அதுதான் தீபாவின் தற்காலிகப் பூச்சாண்டிகளுக்குக் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். அந்தச் சிக்கலில் சமரசம் ஏற்பட்டு, நினைத்தது படிந்துவிட்டால், அதன்பிறகு தீபாவும் சசிகலா குடும்பத்துப் பிள்ளையாகிவிடுவார். ‘அ.தி.மு.க-வில் ஓர் இடம். அதேபோல் ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றிய ஒரு தெளிவு… இதுபற்றி தீபாவுக்கு தெளிவு கிடைக்க வேண்டும் என்கிறார்கள். ஜெயலலிதா வகித்துவந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை தீபாவுக்குக் கொடுத்து, ‘அம்மா’ புகழ் பாடும்விதமாக டூர் அனுப்பிவைக்க அவர்களிடம் ஒரு திட்டம் இருக்கிறது. மேலும், இதற்கு சன்மானமாக ஒரு எம்.பி பதவியும் தரப்படலாம். இதற்கு இன்னும் ஆறேழு மாதங்கள் இருக்கின்றன. அதுவரைக்கும் தீபா பேரவை, ஜெ. தீபா பேரவை காமெடி வெடிகள் வெடித்துக்கொண்டே இருக்கும். போயஸ் கார்டன் வீடு ஒரு தடையாக இருக்கிறது. அந்த வீட்டை தீபா பிடிவாதமாகக் கேட்கிறார் என்கிறார்கள். சசிகலாவுக்கு அதில் விருப்பம் இல்லையாம். ‘போயஸ் கார்டன் வீடு என்பது தமிழகத்தின் அடையாளம். ராமாவரம் தோட்டம், கோபாலபுரம் இல்லம், தைலாபுரம் தோட்டம் என்ற அடையாளங்களைப் போல போயஸ் கார்டன் ஓர் அடையாளம்.
லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக