முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு
சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று கூடியது. இதனைத்தொடர்ந்து,
எதிர்க்கட்சியினர் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகரை
முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைக், மேஜைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சபாநாயகர் மேஜை மீது ஏறி அமர்ந்து
சேதப்படுத்தி பெரும் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர். இதனையடுத்து,
சபாநாயகர் அவையிலிருந்து வெளியேறினார்.
சட்டப்பேரவைக்கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைச் செயலாளர்
ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பன்னீர்செலவம் அணியில் 10 பேராக இருந்த எம்எல்ஏக்கள் தற்போது
16 எம்எல்ஏக்கள் ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இன்னும் சில
எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது லியாவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக