பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர். இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மெரினாவில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் இப்படிப்பட்ட சூழலில் நம்பிக்கை வக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொண்ட அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டாலின் தாக்கப்பட்டதை எதிர்த்து கடலூரில் அரசு பஸ் கண்ணாடி
உடைக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 100 க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக்கோட்டையில் அதிமுக அலுவலகம் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவபொம்மையை செருப்பால் அடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாகை, கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்து போக்குவரத்தை நிறுத்த சொல்லியும், காந்தி சாலையில் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தப்படுகிறது. பல இடங்களில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இது போன்ற போராட்டங்கள் நடந்து வருவதால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது போல இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது வெப்துனியா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக