திங்கள், 3 அக்டோபர், 2011

இந்த 50.000 டொலர்களும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்குமாயின்


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிடவேண்டுமென்று புலிப்பினாமிகள் தொடர்ந்தும் பிரயத்தனங்கள்
மேற்கொள்ளுகின்றனர்.  கனடாவின் புலிப்பினாமி அமைப்பான கனேடிய தமிழ்க்காங்கிரஸ் தலைவர் சர்வதேச மன்னிப்புச்சபைக்கு 50.000 கனேடிய டொலர்களைச் சேகரித்துக் கொடுத்ததன் மூலம் வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகளுக்கும் எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கையூட்டல் கொடுத்து அதனைத் தங்கள் கைக்குள் போடுவதன் மகிந்த ராஜபக்கசவை போர்க்குற்றவாளியாக்கி அவரது ஆட்சியைக் கவிழ்க்க செய்யப்படும் முயற்சியே புலிவாலுப்பிள்ளையின் நடவடிக்கையாகும்.
இந்த 50.000 டொலர்களும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்குமாயின் அவர்கள் எவ்வளவு பயனடைவார்கள். வன்னியில் புலிகள் அழிக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுள் டேவிட் புலிவாலுப்பிள்ளையும் ஒருவர். புலிகள் இவ்வளவு சீக்கிரம் அழிக்கப்படுவார்கள் என்று புலிவாலுப்பிள்ளை போன் பினாமிகள் கனவிலும் நினைக்கவில்லை.
தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டதே என்றுதான் மகிந்த ராஜபக்சமேல் இவ்வளவு காழ்ப்புணர்வில் இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைத்தால் அது மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம். ஆனால் டேவிட் புலிவாலுப்பிள்ளை போன்றவர்களின் நடவடிக்கைகள் அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துபவையாகும். மோன்றியாலிலுள்ள உலகத் தமிழர் பினாமி அமைப்பான தமிழக் காங்கிரஸ் தலைவி ரமணி வாலேந்திரா புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளராகவே செயற்பட்டார். உலகத் தமிழர் இயக்கம் மொன்றியாலில் செய்யும் அடாவடித்தனங்களுக்காக ஊடகங்களுக்கு மறுப்புத் தெரிவித்தார். புலிகள் இயக்கம் கனடாவில் நிதி சேகரிப்பதில்லையென்று தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வியளித்தார். ஆனால் உலகத்தமிழர் இயக்கத்தின் நிதி சேகரிப்பு அம்பலப்படுத்தப்பட்டது. ரமணி வாலேந்திரா உலகத்தமிழர் இயக்கத்தின் சம்பளப் பட்டியலில் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. http://www.scribd.com/fullscreen/47338456
கியூபெக் கனேடியத் தமிழர் காங்கிரஸ்சிற்கும் உலகத்ததமிழர் இயக்கத்திற்குமான தொடர்பு ரமணி வாலேந்திராவின் நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
தகவல்கள் இதோ!மொன்றியாலில் உள்ள உலகத் தமிழர் இயக்கத்தின் அலுவலகம் RCMP புலனாய்வுத் துறையினரால் முற்றுகையிடப்பட்டபோது கனேடியத் தமிழக் காங்கிரஸ்(கியூபெக்) உலகத் தமிழர் இயக்கத்தின் ஒரு பிரிவு என ஆதாரங்கள் உறுதிப்படுத்தின. டேவிட் புலிவாலுப்பிள்ளையின் தலைமையில் உள்ள கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் ஒன்றும் விதிவிலக்கல்ல. ஒரு பயங்கரவாத இயக்கத்தின் பின்னணியிலுள்ள ஒரு அமைப்பு சர்வதேச மன்னிப்புச் சபைக்கு நிதி சோத்துக் கொடுக்கிறாகள் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?

கருத்துகள் இல்லை: