புலமை பரிசு பரீட்சையில் விடை அளிக்காது வெற்றுத்தாள்களை மட்டும் கையளித்த சிறுவன். தாய்க்கு பாடம் புகட்ட செய்த காரியம்.
தொலைகாட்சி பார்க்க விடாமல் விளையாட விடாமல் எந்த நேரமமுன் படிக்கு மாறு நச்சரித்த தாய்க்கு பாடம் புகட்ட எண்ணிய மகன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசு பரீட்சைக்கு விடை அளிக்காமல் வெற்று காகிதத்தை மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு வந்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் நடந்துள்ளது.
பெற்றோர்கள் சிறுவர்களை அளவுக்கு அதிகமாக படி படி என்று கொடுமை படுத்துவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு இது ஓர் நல்ல உதாரணமாகும்.
சுனிமல் என்ற இந்த சிறுவன் படிப்பில் படு சுட்டி அது போலவே விளையாட்டிலும் படு படு சுட்டி.பொழுது போக்கு நிகழ்சிகளிலும் மிகவும் ஆர்வம் கொண்டவன்.
ஐந்தாம் கல்வி ஆண்டில் காலடி எடுத்து வைத்தபோது பிடித்தது புலமை பரிசு என்ற வியாதி.இந்த வியாதியால் பெற்றோரெல்லாம் பிள்ளைகளை வறுத்து எடுப்பது தெரிந்ததே.
டிவி பார்க்காதே விளையாடாதே படி படி படி என்று சதா நச்சரிப்பு முடுக்கிவிடப்பட்டது.பாடசாலை முடிந்ததும் டியுசன் வகுப்பு இரவு வரை ,வீட்டுக்கு வந்தால் சாப்பிட மட்டும்தான் அனுமதி டிவியை தொட முடியாது. ஒய்வு நேரங்களில் நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடவும் அனுமதியில்லை.
இவ்வாறான கெடுபிடிகளால் மனம் வெறுத்துப்போன சிறுவன் படி படி என்றவர்களுக்கும் பாடம் தேவை என்று எண்ணினானோ தெரியவில்லை ஓரளவு சரியான பாடத்தை படிப்பித்து உள்ளான்.
இந்த பெற்றோர்கள் எல்லாம் தயவு செய்து 3 idiots என்ற ஹிந்தி படத்தை பார்த்தல் நன்மை பயக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக