அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகிய திரைப்பட நடிகர் தியாகுவும், ம.தி.மு.க.வைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் காஞ்சி பாஸ்கரும், தனித்தனியே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வுகளின் போது, கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், சமூக நல வாரியத்தின் தலைவருமான சி.ஆர்.சரஸ்வதி உடன் இருந்தார். ஆக மொத்தம் 61 பேர் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
கழகப் பொதுச் செயலாளர், முதல் அமைச்சர் ஜெயலலிதா, மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்ததோடு, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அவர்களுக்கான கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக