| யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கென கனடா பழைய மாணவர் சங்கத்தினால் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்ட கணினிக் கூடத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.
யாழ் மத்திய கல்லூரிக்கென கனடா பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் கோம் எவ் கோப் என்ற மத நிறுவனம் 40 கணினிகளை கொண்டதான நவீன கணினிக் கூடத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
முன்பதாக கல்லூரியின் பிரதான வாயிலிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் புதிய கணினிக் கூடத்தை திறந்து வைத்ததுடன் அதன் பணிகளையும் சம்பிராயப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் அதன் தற்காலிக அதிபர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அமைச்சர் அவர்கள் உரையாற்றும் போது பாடசாலை நேரங்களில் முக்கியமாக பாட நேரங்களில் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதனூடாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுமெனவும் எனவே எதிர்காலங்களில் இவ்வாறு பாடசாலை நேரங்களில் இப்பேற்பட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் வெகுவிரைவில் இப்பாடசாலைக்கான நிரந்தர அதிபரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இக்கல்லூரியில் நல்லதொரு மாற்றத்தையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் பாடுபடுவேன் என்று தெரிவித்ததுடன் ஏற்கனவே இக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் எனது தயாருமான மகேஸ்வரியின் பெயரால் ஏற்கனவே ஒரு கணினிக் கூடத்தை அமைத்துக் கொடுத்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக