திருச்சி: கொஞ்சம் கூட மரியாதை இல்லாத கட்சிதான் அதிமுக. அதனால்தான் அந்தக் கூட்டணி வேண்டாம் என்று கூறி பிரிந்து வந்து விட்டோ் என்று அதிமுகவிலிருந்து தேமுதிக விலகி வந்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா.
ஆஹா இப்பதான் நேக்கு அல்லாம் புரியிறது. ம்ம்ம்ம் ஏறி வந்த இனி தேவை இல்லை என்று ஜெய பக்கம் சாடுகின்றதோ?
திருச்சி, திருவெறும்பூரில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார் பிரேமலதா. அப்போது அதிமுகவை மரியாதை இல்லாத கட்சி என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.
பிரேமலதா பேசுகையில்,
தற்போது மரியாதை இல்லாத கட்சியுடன் கூட்டணியில் இருக்க வேண்டாம் என்று தான் அதிமுகவை விட்டு பிரிந்து வந்தோம். தேமுதிகவை மதித்த கட்சிகள் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்தோம். அதற்கு காரணம் சேலம் மாநாட்டில் தொண்டர்கள் விரும்பியது தான் என்றார் பிரேமலதா.
அதிமுகவிலிருந்து தேமுதிக பிரிந்து வந்த பிறகும் இதுவரை அதிமுகவை விஜயகாந்த் கடுமையாக தாக்கிப் பேசவில்லை. அதேபோல அதிமுக தரப்பிலும் தேமுதிக குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, அதிமுகவை மரியாதை இல்லாத கட்சி என்று கடுமையாக தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுகவினர் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் சேர்ந்ததால் கிடைத்த பலத்தால்தான் இன்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக தேமுதிகவால் அந்தஸ்து பெற முடிந்தது. இல்லாவிட்டால் வாக்குப் பிரிக்கிற கட்சியாகவே இன்று தொடர்ந்திருக்கும் தேமுதிக. அது கூட புரியாமல் பிரேமலதா இப்படிப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று திருச்சி அதிமுக பிரமுகர்கள் கூறியுள்ளனர்.
இனி வரும் அதிமுக மேடைகளில் விஜயகாந்த்தைத் தாக்கி அதிமுக பேச்சாளர்கள் பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக