வெள்ளி, 7 அக்டோபர், 2011

53 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு



53 குழந்தை தொழிலாளர்கள் மீட்புடெல்லியில், குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு படையினரும், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து, சுல்தான்பூர், மங்களாபுரி உள்ளிட்ட இடங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த, 14 வயதுக்குட்பட்ட 53 சிறுவர், சிறுமியர் மீட்கப்பட்டனர்.


இதில், 7 வயது சிறுவர்களும் அடக்கம். விசாரணையில், அவர்கள் பீகார், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுக்கு வாரக்கூலியாக ரூ. 50 முதல் 100 மட்டுமே வழங்கப்படுவதும் தெரியவந்தது.

மேலும், அவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக, அந்த தொழிற்சாலைகளைச் சேர்ந்த ஏழு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் டில்லியில் உள்ள பல்வேறு தொழிற் சாலைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது, இதுவரை 173 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: