வெள்ளி, 7 அக்டோபர், 2011

சிவகாசி ஜெயலட்சுமி மீதான வழக்கில் அக். 11ல் தீர்ப்பு

Jayalakshmi
மதுரை: சிவகாசி ஜெயலட்சுமி மீது தொடரப்பட்ட நகை மோசடி வழக்கில் அக்டோபர் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த ஜெயலட்சுமி ஒரு காலத்தில் தென் மாவட்ட காவல்துறையில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தினார். போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று பின்னர் அவர் விடுதலையானார். இந்த நிலையில் அவர் மீதான நகை மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வந்தது.இந்த வழக்கில் அக்டோபர் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது.கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 73 பவுன் நகையை கடந்த 2004ம் ஆண்டு மோசடியாக பெற்று ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மதுரை கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கதிரவன் அக்டோபர் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று இன்று அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: