கொழும்பு- யாழ். தனியார் பஸ்கள் வெள்ளவத்தையில் புதிய இடத்தில்; வெள்ளிக்கிழமை முதல் நடைமுறையில்
நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுரசேனநாயக்கவுடன் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப் பாளர் இ.அங்கஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்த பஸ் சேவைகள் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை இடம் பெறவுள்ளன.ஒரு மணித்தியாலத்துக்கு 10 பஸ்கள் என்ற ரீதியில் இந்தச் சேவை நடை பெறும். இந்த பஸ்களுக்கு முற் பதிவு செய்தவர்கள் தமது பஸ்கள் புறப்படும் நேரத்தை அறிந்து இந்த இடத்துக்கு வரு வதன் மூலம் பயணத்தை மேற்கொள்ள முடியும்.கொழும்புயாழ்ப்பாணம் பஸ்களுக்கு நிரந்தர பஸ் தரிப்பிடம் இல்லாததையும் கவனத்தில் கொண்டு இரத்மலானையில் தரிப்பிடத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ் தரிப்பிட வசதி இல்லாத பஸ் உரிமையாளர்கள் இரத்மலானையில் தமது பஸ்ஸை நிறுத்தி வைக்கமுடியும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக