ஜனாதிபதி இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காண சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்த உரையாற்றிய அவர் எமது நாட்டை சிறிய நாடு என்று நான் கூறியதும் இல்லை, நினைத்ததும் இல்லை எனக் கூறினார். மேலும், எமது நாட்டை யாரால் சிறிய நாடு என்று கூறமுடியும், எமது நாட்டில் பெறுமதிமிக்க இயற்கை வளங்கள் உள்ளன திருகோணமலை துறைமுகம், சிகிரியா ஓவியம் என பல வளங்கள் எம் நாட்டினில் உள்ளது.
இதேவேளை, ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, ஒரே தேசியக்கொடி, இங்கு எல்லோரும் சம உரிமையோடு வாழவேண்டும் அவைதான் எமது தேவை என உரை நடுவே ஓரிரு வார்த்தைகள் ஜனாதிபதி தமிழில் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக