இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் இருவருக்கிடையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கத்திக் குத்தில் முடிந்துள்ளது. 29 வயதுடைய தன்சகபாடியை 32 வயதுடைய இன்னொரு இளைஞன் கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.
ஆர்கவ் மாநகரத்தில் உள்ள ஸ்பிரிடன் பாச் பகுதியில் அமைந்திருக்கும் அகதிகள் முகாம் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது கடந்த புதன்கிழமை இரவு இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கத்தியால் குத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். காயப்பட்டவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கத்திக் குத்துக்கான காரணம் என்ன? என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.
இவ்வாறான மோதல்கள் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் பிரச்சாரங்களுக்குத் துணை போவதாக அமைந்துவிடும் என்று தமிழ் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக