நயன்தாரா விவகாரத்தில் என்ன நடக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, லதா என் மனைவியே இல்லை. அவருக்கும் எனக்கும் நடந்த திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்று பிரபு தேவா பளிச் என பேசியிருக்கிறார். இப்படி அவர் ‘தபாய்ப்பார்’ என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். அதனால் தான் லதா, ரேஷன் கார்டு, மகனின் இறப்பு சான்றிதழ் என அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்திருக்கிறார். அதை சமாளிக்க மும்பையில் தன் நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பிரபுதேவா.
லதா என் மனைவியா? இல்லவே இல்லை! என்று சொல்லிவரும் பிரபு தேவா, தன் மகன் இறந்த போது பாசக் கண்ணீர் விட்டாரே? அது வெறும் வேஷமா? என கேள்விகள் கிளம்பி உள்ளன. இவ்வளவு சர்சைகளுக்கு இடையிலும் தன் சினிமா பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் பிரபு தேவா.
பிரபு தேவாவின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் 'எங்கேயும் காதல்'. படத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்திருக்கிறார்கள். இதன் இசை வெளீட்டு விழாவை ரகசியமாய் நடத்தி முடித்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்களை பிரபு தேவா சந்திக்க விரும்பவில்லை என்பதே இந்த ரகசிய விழாவிற்கு காரணம். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்தைப் பற்றிய செய்தியை பத்திரிகைகளுக்கு எழுத்து மூலம் அனுப்பிருக்கிறார் பிரபு தேவா.
இதுவரை தமிழில் போக்கிரி, வில்லு என அதிரடி மாஸ் படங்களை இயக்கினேன். ஆனால் 'எங்கேயும் காதல்' முழுக்க முழுக்க காதல் கதை. படம் பார்க்கையில் தென்றல் உங்களை தழுவும்போது ஏற்படும் பரவசத்தை உணர்வீர்கள். இது காதலைக் கொண்டாடுகிற ஒரு உணர்ச்சி மயமான படம். எம்.ஜி.ஆர் நடித்த 'அன்பே வா' படத்தை போன்ற படமாய் இது அமையும் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பிரபு தேவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக