சனி, 20 நவம்பர், 2010

பெண்கள் முன்னேற்றத்திற்கு சாய்பாபா சேவை அபரிமிதம்: ஜனாதிபதி

புட்டபர்த்தி : சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, புட்டபர்த்தியில் நேற்று நடந்த பெண்கள் தின விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகையில், "மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளன்று பெண்கள் தினத்துக்கு இங்கு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக சாய்பாபா ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது. இந்த சேவை, பெண்கள் சுயஅறிவும், சுயநம்பிக்கையும் பெறுவதற்கு உதவும்' என்றார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிரசாந்தி நிலைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். சாய்பாபா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 29வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன்சிங் 22ம் தேதி கலந்து கொள்கிறார். பிரசாந்தி நிலைய நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். சாய்பாபாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக அவரது, பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் புட்டபர்த்தியில் குவியத் தொடங்கிவிட்டனர். ஏராளமானோருக்கு இலவச திருமணத்துக்கும் ஏற்பாடாகியுள்ளது.
Suseela - Chennai,இந்தியா
2010-11-20 10:24:09 IST
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஜெய் சாய்ராம். பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் ஆசிர்வாதம் வேண்டும்....
Sivaraam - Bangalore,இந்தியா
2010-11-20 10:15:43 IST
பல ஆயிரக்கணக்கான மக்களை நல்ல நெறியில் கொண்டு செல்லும் பாபா அவர்களை நன்றியுடன் வனுங்குகிறோம். ஜெய் சாய் ராம்...
பிரகாஷ் - karur,இந்தியா
2010-11-20 10:04:37 IST
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாமி ........
மதனகோபால் - ராஜபாளையம்,இந்தியா
2010-11-20 09:44:58 IST
சாய்ராம்......
ப.ர.selvaganesh - குல்லுHimachalpradesh,இந்தியா
2010-11-20 09:05:11 IST
ஒரு சிறிய விளக்கம் அளிக்க விருப்பம். இந்திரா அம்மையாரின் பிறந்தநாளை ஒட்டி பர்த்தியில், மகளிர் தினம் கொண்டாடபட்டது போன்று உரை அமைதுள்ளது. உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் இத்தினத்தை எல்லா வருடமும் மகளிர் தினமாக கொண்டாடுகிறார்கள். இதை யாரும் அரசியல் நோக்கில் காணக்கூடாது என்பது என் வேண்டுகோள்....
விஸ்வேஸ் பாபு - மதுரை,இந்தியா
2010-11-20 06:39:20 IST
நடமாடும் அன்பிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு........
சத்யா சரவணன் - சென்னை,இந்தியா
2010-11-20 01:23:15 IST

கருத்துகள் இல்லை: