ஏழை, எளியவர்களுக்கான மருத்துவசிகிச்சைகள் அளிப்பதில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மியாட் மருத்துவமனையில் இரையகக் குடலியல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான நவீன மையத்தை துவக்கிவைத்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர், ‘’ ரூபாய் 10 கோடி செலவில் இன்று உங்களின் அன்பான வாழ்த்துக்களோடு துவக்கப்படும், மியாட் மருத்துவமனையின் இரையகக் குடலியல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான நவீன மையத்தை துவக்கிவைப்பதில் உங்களோடு சேர்ந்து நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பிரிவை தொடங்கியுள்ள இம்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் மோகன்தாஸ் மற்றும் இம்மருத்துவமனையின் தலைவராக பணியாற்றும் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோரை உங்களின் அனைவரின் சார்பாக வாழ்த்துகிறேன்;போற்றுகிறேன், பாராட்டுகிறேன்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் எலும்பு மருத்துவ சிகிச்சையில் இரு முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் டாக்டர் மோகன்தாஸ்.
இவருக்கு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு மருத்துவத்தில் பேராசிரியராக அரும்பணியாற்றிதை கருத்தில் கொண்டு, மைய அரசு இவருக்கு “பத்மஸ்ரீ” பட்டம் வழங்கி பெருமை சேர்த்துள்ளது.
இவருக்கு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு மருத்துவத்தில் பேராசிரியராக அரும்பணியாற்றிதை கருத்தில் கொண்டு, மைய அரசு இவருக்கு “பத்மஸ்ரீ” பட்டம் வழங்கி பெருமை சேர்த்துள்ளது.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்ததால் “இந்திய நவீன எலும்பு மருத்துவத்தின் தந்தை” எனவும் இவர் பெருமையுடன் மருத்துவ உலகில் அழைக்கப்படுவது நமக்கெல்லாம் பெருமை மட்டும் அல்ல தமிழகத்திற்கே பெருமை. இவரது வெற்றிக்குப் பின்னால் இவரது துணைவியார் மல்லிகா மோகன்தாஸ் இருந்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.
பின்னால் என்று சொல்வதைவிட, முன்னாள் நின்று பணியாற்றுகிறார். அதுபோல் தான் இன்றைய மகளிரின் நிலைமை சிறப்பிற்குரியதாக உள்ளது. மியாட் மருத்துவமனையின் தலைவர் பொறுப்பினை ஏற்று திறம்படி நிர்வகித்து வருகிறார்கள்.
இருதய அறுவை சிகிச்சை, குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை, சீறுநீரகவியல், புற்றுநோய் சிகிச்சை என பல்வேறு தரப்பு சிகிச்சைக்கான துறைகளில் இந்த மியாட் மருத்துவமனை சிறப்புடன் மருத்துவ சேவையாற்றி மருத்துவத்துறையில் சிறப்பான இடத்தினை பிடித்துள்ளது.
உயர் சிகிச்சைகளுக்காக, மேலை நாடுகளுக்கு சென்றுவந்த நிலைமாறி, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலேயே, முதன்மையான மருத்துவ வசதிகளை உருவாக்குவதில், தலைவர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசும், தனியார் மருத்துவமனைகளும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மியாட் மருத்துவமனையை போன்ற பல தலைசிறந்த மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக