வியாழன், 18 நவம்பர், 2010

பஸ்களில் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த கும்பல் பொலிஸாரிடம் சிக்கியது


பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் பல்வேறு வேடங்களை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டுவந்த திருட்டுக் கும்பலை கிளிநொச்சிப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சாத்திரம் கூறும் குறவர்கள், பிச்சைக்காரர்களெனப் பல விதமான வேடங்களில்  இந்தக் கும்பல் பேருந்துகளில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்து தமது கைவரிசையைக் காட்டி வந்துள்ளது.  இந்தத் திருட்டுக் கும்பல் கர்ப்பிணிப் பெண்கள்,  சிறுவர்கள் ஆகியோரையும் இந்தத்  திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்தத் திருட்டுக் கும்பலைப் பொலிஸார் மிகவும் சாதுரியமான முறையில் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர் களிடம் மேற்கொண்ட  விசாரணையின்போது பல ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தையும்,  நகைகளையும் இவர்கள் கொள்ளையிட்டமை தெரிய வந்தது. ஏ9 பாதையூடாகப் பயணம் செய்யும் மக்கள் மிக்க அவதானத்துடன் இருந்து தமது பொருள்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கிளிநொச்சி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

கருத்துகள் இல்லை: