வியாழன், 18 நவம்பர், 2010
பொலநறுவையில் புனர்வாழ்வு பெற்ற 100 பேர் விடுதலை
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 100 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். பொலநறுவை- சேனபுர முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலையில் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தினகரனுக்குத் தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இதேவேளை, ஜனாதிபதியின் பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு மேலும் 100 கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் நீதி, சட்ட மறுசீரமைப்புக்குச் சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக