உலகத்தில் உயிரினம் தோன்றிய போதே காமமும் சேர்ந்தே வந்தது. ஆறறிவு பெற்ற மனிதயினம் தான்... நாகரிகம் வளர வளர காமத்தை தனியாக பிரித்து எங்கும், யாரிடமும் அதைப்பற்றி பேசக்கூடாது, விவாதிக்ககூடாது என கலாச்சாரம் என்ற பெயரில் கடிவாளம் போட்டு பூட்டி வைத்துவிட்டது. அந்த கடிவாளம் கழட்டப்பட முடியாமல் காலம் காலமாக அப்படியே இருந்து வருகிறது.
இன்றைய யுகத்தில் , இந்தியாவில் காமம் பற்றி பேசுவது என்பது தீண்டத் தகாத, உச்சரிக்க கூடாத வார்த்தைகளாகிவிட்டன. குறிப்பாக காமத்தை பற்றி இன்றைய சமுகம் தன் தாய்-தந்தையிடம் கூட பேசி அறிந்து கொள்ள முடியாத நிலையை நம் கலாச்சாரத்தில் உருவாக்கி வைத்துவிட்டார்கள்.
இப்படி காமத்தை தீண்டத் தகாததை போல உருவாக்கிய நம் நாட்டில் தான் காமசூத்ரா படைக்கப்பட்டது என்பதை ஏனோ வசமாக மறந்துவிட்டார்கள்.
மனிதன் அறிந்து கொள்ள வேண்டும் என படைக்கப்பட்ட அந்த நூலை நம் நாட்டில் புரிந்து கொண்டோமா, ஏற்றுக்கொண்டோமா என்றால் இல்லை என்று
சமூகத்தை நாங்கள் சொல்வது தான் சரி என்று அதை நோக்கி திருப்பி விட்டார்கள். இதுவே இளைய சமூககத்தினரிடம் காமம் பற்றிய குறைபாட்டை அதிகமாக்கியிருக்கிறது. அதைதெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையில் அலையும் போது... காமம் என்பது காதலின் முதல் படி என தவறாக புரிந்துக்கொண்டு குழம்பிப்போய் காதல் புரிவதை காமமாக நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்த குழப்பம்
ஒரு விவகாரத்தை மறைக்க மறைக்கத் தான் அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகும்.
அதற்காக எதையும் செய்ய தூண்டும். இந்த தூண்டல் தான் நம் சமுகத்தில் கள்ள உறவுகள் பெருக வழி செய்தது. இளைஞர்களும் காதல் என்கிற பெயரில் தடம் மாற தொடங்கினார்கள்.
சில நூற்றாண்டு காலத்திற்கு முன் சமூகமும், சமூகத்தின் ஒரு அங்கமான அரசனும் எல்லாவற்றையும் வெளிப்படையாக்கினார்கள். அப்படி காமத்தையும் வெளிப்படையாக்கி அதற்காக சிற்பங்களை உருவாக்கி வைத்து விட்டு சென்றுள்ளான் என்றால் அதை நம்ப யோசிப்பார்கள்.அதுவும் தமிழகத்தில் என்றால் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.
அந்த காம சிற்பங்கள் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சின்னியம்பேட்டை கிராமத்தில் உள்ளது.
அந்த காம சிற்பங்கள் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சின்னியம்பேட்டை கிராமத்தில் உள்ளது.
விவசாயத்தையே மூலதனமாக கொண்ட சிற்றூர் இது. இப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டில் ஆண்ட குறுநில மன்னன் சின்னையன் என்பவனுக்கும் பக்கத்தில் படவேட்டை பகுதியை ஆண்ட குறுநில மன்னனுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது.
இந்த போரை நிறுத்த எண்ணிய சின்னையன் தன் மகளை படவேட்டை அரசினின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தான். மகளோ வயதுக்கூட வரவில்லை. அவளை அந்த கட்டிளம்காளை ராஜகுமாரனுக்கு திருமணம் செய்து வைத்து போர் மூளாமல் நிறுத்தினான் சின்னையன். புகந்த வீடு போன பெண்ணை முதலிரவுக்காக அனுப்பினார்கள்.
அந்த மஞ்சத்துக்கு திரவிய வாசனைகளோடு வந்தவளை ராஜகுமாரன் கட்டியணைத்து முத்திமிட கூச்சல் போட்டு கத்தினாள். அரண்டு போன ராஜகுமாரன் தன் தந்தையிடம் கூற மறுநாள் கசக்கப்பட்டாத அந்த பெண் குதூகலத்துடன் தாய் வீடு வந்து சேர்ந்தாள்.

மகள் வாழா வெட்டியாக வந்திருப்பதை கண்ட அரசன், மனம் கவலையுற்று காமத்தை பற்றி அவளின் தோழிகள் மூலம் எடுத்துரைக்க வைத்தான். தோழிகளுக்கு சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம். இளவரசிக்கு புரியவில்லை. இதை தன் நம்பிக்கைக்குரிய மந்திரியிடம் சொல்லி அரசன் ஆலோசனை கேட்டபோது...
சொல்லி தெரிவதில்லை களவாடலும், காமமும்! அவர்கள் அதை உணர வேண்டும்...காண வேண்டும் என்றார். எப்படி என அரசன் கேட்க, காமத்தை சிற்பமாக செதுக்கி வைத்து தினமும் இளவரசிக்கு புரிய வைக்க முயலுவோம் என ஆலோசனை தர அதன் படி பணிகள் ஆரம்பமாகின.
ஊருக்கு வெளியே இளவரசிக்கென்று ஒரு குளம் தயார் செய்யப்பட்டது. அந்த குளத்தின் படிக்கட்டுகள், சுற்று சுவர்களில் இளவரசி திருமணத்தை பற்றி செதுக்கியவர்கள், அதன் பின் காமத்தை விளக்கும் சிற்பங்களையும் செதுக்கினார்கள். அதில் குளிக்க வந்த இளவரசி காமம் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை புரிந்து, அறிந்துக்கொண்டு கணவனோடு போய் சேர்ந்து நல் வாழ்வு வாழந்தாள் என்பது தான் அந்த வரலாறு. செஞ்சி கேட்டையில் இதற்கான முழு வரலாறும் வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அவ்வூர் பெரியவர்கள்.
குளத்தை வளம் வந்தபோது, கலவியில் உள்ள வகைகளை தெளிவாக பதிவு செய்திருந்தார்கள். ஆண்-பெண்ணுக்கான கலவி வகைகள், மனிதனுக்கும் கலவி வகைகள், புணர்ச்சியில் எப்படியெல்லாம் ஈடுபடலாம் போன்றவற்றை சிற்பமாக செதுக்கி வைத்திருந்தார்கள்.
இதை தொல்பொருள்துறை எடுத்து பராமரித்து வருகிறது. 150 ஆண்டுகள் கடந்து நிற்கும் இந்த குளத்தை சிதைக்காமல் பராமரித்து வருகிறார்கள் அந்த ஊர் மக்கள். பள்ளி கல்லூரிகளில் பாலியல் கல்வியை வைத்தால் மாணவ சமுதாயம் சிதைந்து போய்விடும் என விமர்சனம் செய்பவர்கள் இந்த கிராமத்தை பார்த்தால் நல்லது.

- ராஜ்ப்ரியன்.
3 கருத்துகள்:
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் முழுவதுமாக
பராமரிக்கப்படவில்லை. குளம் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான
பாட்டில்களாக நிறைந்துள்ளன.ஆகவே தமிழனின் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்க வேண்டுகிறோம்.
இது தமிழனின் சொத்து பாரம்பரியம்
சே.எழிலரசன்
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் முழுவதுமாக
பராமரிக்கப்படவில்லை. சமீபத்திதில் நான் பார்க்க சென்றேன் அப்போது குளம் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான
பாட்டில்களாக நிறைந்துள்ளன. 300மீட்டர் வரை பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழனின் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்க வேண்டுகிறோம்.
இது தமிழனின் சொத்து பாரம்பரியம்
சே.எழிலரசன்
அகில இந்திய மாணவர்கள் பொது நலச் சங்கம்
செங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர்
டாக்டர் .அம்பேத்கர் நகர் 3
கீழ்வணக்கம்பாடி கிராமம் & அஞ்சல்
தண்டராம்பட்டு ஒன்றியம்
திருவண்ணாமலை மாவட்டம் -606 707
அலைபேசி: 9941600588
கருத்துரையிடுக