வெளிநாட்டின் பிரபல பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பை மேற்கொள்ள வாய்ய்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி மாணவர்களிடம் 60 லட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழையும் இவர் வழங்கியதாகக் கூறி, யாழ். பொலிசார் மேற்படி நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான (65 வயது) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக