நீதவான் ஒருவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட போக்குவரத்துப் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறிப்பிட்ட போக்குவரத்துத் துறை பொலிஸ் சார்ஜன்ட் ஹட்டன் நகரில் மீன் விற்பனை செய்த வாகனமொன்றுக்கு அருகில் மோசமான வார்த்தைப் பிரயோகத்தினை மேற்கொண்டிருந்த போது அவ்விடத்தில் நீதவான் ஒருவர் இருப்பது குறித்து பொதுமகன் ஒருவர் குறிப்பிட்ட சார்ஜன்ட்டுக்கு அறிவித்துள்ளார்.
அதன் போது அந்த சார்ஜன்ட்ட நீதவானை அவமதிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகத்தினை பிரயோகித்துள்ளார்.இவ்விடயம் குறித்து குறிப்பிட்ட நீதவான் பொலிஸ் உயரதிகாரிக்கு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது அந்த பொலிஸ் சார்ஜன்ட் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நீதவான் நுவரெலியா மாவட்டம் வலப்பனை நீதிமன்ற நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக