அரியாலை கிழக்கில் 400 ஏக்கர் வயல் நிலங்கள் 15 வருடங்களின் பின்னர் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. நேற்று நடைபெற்ற ஏர்பூட்டு விழாவின்போது இந் நிலங்கள் கையளிக்கப்பட்டன. கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபி விருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் மு.சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மற் றும் யாழ்.கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதியின் திட்டத்தில் நடை பெறும் மீள்குடியமர்வுகளில் இதுவும் ஒன்று. தற்போது வடக்கில் 120 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் மீளக்கையளிக்கப்பட்டு நெற்செய்கை இடம்பெறவுள்ளது.இதில் யாழ்ப்பாணத்தில் இதுவரை 909 ஏக்கர் காணிகள் மீளக்கையளிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். அத்துடன் நிகழ்வில் உரையாற்றிய பாரம் பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 400ஏக்கர் வயல் காணிகள் இன்று (நேற்று) மக்களிடம் கையளிக்கப் படுகிறது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு இவ்வாறு தொடர்ந்தும் மீதமுள்ள காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்.கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களை சரியா கப்பயன்படுத்தி கிடைப்பவற்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.அரியாலைக் கிழக்கில் யுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 15 வருடங்களாக இப் பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று 400 ஏக்கர் வயல் நிலங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக