இனங்காணப்பட்ட 70 ஆபாச இணையத்தளங்களை தடை செய்யுமாறு பத்தரமுல்லை சிறுவர் நீதிமன்றினால் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினால் இன்று சிறுவர் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினால் இனங்காணப்பட்ட ஆபாச இணையத்தளங்களும் இன்று தடைசெய்யப்படும் இணையத்தளங்கள் உட்பட தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவினால் இதுவரை 345 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக