பார்த்திபனுக்காக சீதா நடத்திய கல்யாண நாடகம் - புதுத்தகவல்!
நடிகை சீதா இரண்டாவது திருமண விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், பார்த்திபனை வெறுப்பேற்றுவதற்காகத்தான் அப்படியொரு நாடகத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சீதா, பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் - சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
பார்த்திபனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் சீதா, சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சதீஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. அது முற்றிலும் உண்மை அல்லவாம். பார்த்திபனுக்கு அவரது உறவு முறையில் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த செய்தி கேள்விப்பட்டுத்தான் சீதா, திருமண நாடகம் அரங்கேற்றியதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது சில நாட்களாக!
அதானே?! சதீஷூடன் ஒரே வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் சீதா திடீர் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம்தான் இருக்கப் போகிறதா என்ன?
பார்த்திபனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் சீதா, சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சதீஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. அது முற்றிலும் உண்மை அல்லவாம். பார்த்திபனுக்கு அவரது உறவு முறையில் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த செய்தி கேள்விப்பட்டுத்தான் சீதா, திருமண நாடகம் அரங்கேற்றியதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது சில நாட்களாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக