ஏகாதிபத்திய திமிர்
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சிகாகோ விமான நிலையத்தில் இரட்டை சோதனைக்கு உள்ளாக் கப்பட்டுள்ளார். அமெரிக்கபுலனாய்வுப் பிரிவின் பட்டியலில் பிரபுல் படேல் என்ற பெயருள்ள நபரும் இடம்பெற்றிருந்ததால், அமைச்சர் பிரபுல் படேலை கேள்விகளால் துளைத்துஎடுத்துள்ள னர். ஒருமுறைக்கு இருமுறை அவரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வ தாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது பிரபுல் படேல் என்ற தனிநபர் தொடர்புடைய பிரச்சனை அல்ல. இந்தியாவின் விமானப் போக்குவரத்து அமைச் சருக்கே இந்த கதி என்றால், அந்த நாட்டுக்குச் செல்லும் சாதாரண இந்தியர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்தியர்கள் இவ்வாறு அமெரிக்க விமான நிலையத்தில்அவமானப்படுத்தப்படுவது இது முதல்முறையல்ல. முன்பு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண் டஸ் அமெரிக்க விமானநிலையத்தில் ஆடை கள் களையப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப் பட்டார். இந்த தகவலை அமெரிக்க உயர் அதி காரி ஒருவர் தெரிவித்த பிறகே விஷயம் வெளியே வந்தது. மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானியும் கடுமையான சோத னைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள் கமல் ஹாசன், மம்முட்டி, ஷாருக்கான்ஆகியோரும் அமெரிக்க விமான நிலையங்களில் பலமணி நேரம்தங்கவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கமல்ஹாசன் என்பது ஒரு முஸ்லிம் பெயர் போல கருதப்பட்டதால் அவரிடம் தீவிரவிசார ணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. மம்முட்டியின் பெயர், முகமது குட்டி என்று இருந்ததால் அவரும் சோதனைக்கு உள்ளானார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து செல் லும் முஸ்லிம்கள் அமெரிக்க விமான நிலை யங்களில் தீவிரவாதிகள் போலவே நடத்தப்படு வதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு பாதுகாப்பில் அந்தந்த நாடுகளுக்கு இருக்கும் அக்கறையை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மற்ற நாடுகளின் அமைச்சர்களை கூட அவ மானப்படுத்துவது என்பது சகித்துக் கொள்ள முடியாதது. ஏகாதிபத்திய திமிர்த்தனத்தை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்தியா வரப் போவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அவரது பாதுகாப்பை இந்தியாவில் கூட அமெரிக்க அதிகாரிகளே மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதே போன்று இந்திய ஜனாதிபதி அல்லது பிரதமர் அமெரிக்கா செல்லும்போது இந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறினால் அதை அமெரிக்கா ஏற்குமா?
பிரபுல் படேல் இது ஒரு சாதாரண விஷயம் தான் என்று சமாளித்துள்ளார். அமெரிக்காவை எந்த விஷயத்திலும் பகைத்துக் கொள்ள பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தயாராக இல்லை. ஆனால், இந்திய மக்களும் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை.

(தீக்கதிர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக