நெல்லை: சிவப்பு விளக்குப் பொருத்தப்பட்டு, பதிவெண் எழுதப்படாத, தேசியக் கொடி பறக்கவிடப்பட்ட காரில், பயணம் செய்த திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய அதிமுக வக்கீல் ரவி ஆறுமுகத்தின் மனுவை நெல்லை கோர்ட் தள்ளுபடி செய்தது.
சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட, தேசியக் கொடி ஏற்றப்பட்ட காரில் திருநெல்வேலி மாவட்டம் செயின்ட் சேவியர் கல்லூரிக்கு ஜூலை 15-ம் தேதி கனிமொழி வந்ததார். அந்த காரில் பதிவு எண் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற சலுகைகளை அனுபவிப்பதற்குரிய பதவியை அவர் வகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்த ரவி ஆறுமுகம், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதுகுறித்து பதில் மனுவைத் தாக்கல் செய்த காவல்துறை உதவி ஆணையர் தனது மனுவில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவுடன் தற்காலிகப் பதிவெண் கொண்ட காரில்தான் கனிமொழி செய்தார் என்று கூறியிருந்தார்.
இந்த விளக்கத்தால் திருப்தி அடைந்த மாஜிஸ்திரேட் கண்ணன், ரவி ஆறுமுகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக