வியாழன், 30 செப்டம்பர், 2010

மகளை சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்த தந்தை கைது: கம்பளை பகுதியில் சம்பவம் (படங்கள் இணைப்பு)



தனது மகளை சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்த தந்தையொருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இச்சம்பவம் நேற்று கம்பளை  – கோணடிக்கா  தோட்ட  மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கோணடிக்கா    தமிழ் – சிங்கள மகா வித்தியாலயத்தில்  தரம்  மூன்றில்  கல்வி பயின்று   வந்த சிறுமியே இதன்போது  கொலையுண்டவராவார்.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,    குறித்த சிறுமியின்   தாய் வெளிநாடொன்றுக்கு   வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள  நிலையில் மேற்படி சிறுமியும் மற்றும் சிறுமியின் மூத்த சகோதரனும்   இளைய சகோதரியும்   தந்தையின் பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மதுவிற்கு அடிமையான மேற்படி தந்தையால் தினமும் இரவு நேரங்களில் இச்சிறுவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகி வந்துள்ளனர். இதுபற்றி பிரதேசவாசிகள்  கோணடிக்கா  தோட்ட பொறுப்பாளடரிம்   பலமுறை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த நபர், இரவு நேரங்களில் இச்சிறுவர்களின் வாய்களை துணியினால் கட்டியும், தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை அதிகமாக வைத்து விட்டுமே அடித்து, சித்திரவதை செய்து வந்துள்ளதாக குறிப்பிடும் பிரதேசவாசிகள், கொலையுண்ட சிறுமியின் சகோதரனின் உடம்பிலும்  தீயினால்  சுட்ட  காயங்கள் காணப்படுவதாக தெரிவித்தனர்.
சம்பவதினம் இரவு குறித்த சிறுமியை காணாத நிலையில் அயலவர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.   அதன் போது அந்த சிறுமி   மூக்கில் இரத்தம் வழிந்த நிலையிலும், கழுததில்   கீறல் காயங்களுடனும் உரியிழந்த நிலையில் நிலத்தில் கிடந்துள்ளார்.
இதையடுத்து,   பிரதேசவாசிகள்   விடயம்   தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததோடு,     சந்தேக நபரை நையப்புடைத்து பொலிஸாரி டம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு  சிறுவர்களை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: