Posted 27 Dec 2006 ஜூனியர் விகடன் : வைகோ விவரிக்கும் ‘கிடுகிடு’ ஆபரேஷன்
‘‘என் கட்சியையும் உயிரையும் காப்பாற்றினார் சோனியா!’
வைகோவை தடா வில் கைது செய்த போதுகூட இவ்வளவு பரபரப்பாக இருந்த தில்லை, ம.தி.மு.க&வின் தலைமை அலுவலக மான தாயகம். கட்சிக்குள் போர்க்கொடி தூக்கிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் 25&ம் தேதியன்று தாயகத்தைக் கைப்பற்றப் போவதாக செய்திகள் பரவ, அன்றைய தினமே அனைத்துக் குழு கூட் டத்தையும் கூட்டினார் வைகோ. இதனால் தகித்துக்கொண்டிருந்தது தாயகம்.
சரியாக மாலை ஐந்து மணிக்குக் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வைகோவால் தனது காருக்குள் ஏறமுடியாத அளவுக்குத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ‘முக்கியமான காரியமா ஏர்போர்ட்டுக்குப் போறேன். கட்சி ஆபீஸை யாரும் கைப்பத்த முடியாது. நீங்க இருக்கற வரைக்கும் எனக்கும் ஒண்ணும் ஆகாது’ என்று அனைவரையும் ஆறுதல் படுத்திவிட்டு காருக்குள் ஏறிய வைகோ, பிரத் யேகப் பேட்டிக்காக நம்மையும் உடன் ஏற்றிக் கொண்டார். போக்குவரத்து நெருக்கடி யில் கார் நீந்திச் செல்ல ஆரம்பிக்க, ‘‘கலிங்கப் பட்டியில இருக்கற தலித் கிறிஸ்தவர்கள் புதுசா ஒரு சர்ச் கட்டியிருக்காங்க. அதைத் திறக்க என்னைக் கேட்டுக்கிட்டாங்க. இக்கட்டான சூழ்நிலையில வருவாரோ மாட்டாரோனு நினைச்சுக்கிட்டிருப்பாங்க. அதான் அவங்களோட அழைப்பை ஏற்று இதோ ஊருக்குப் போயிக்கிட்டிருக்கேன்’’ என்று தன் தொண்டையைச் சரிசெய்தவராக நம் கேள்விகளை எதிர்கொள்ளத் துவங்கினார் வைகோ.
‘‘தாயகத்தைக் கைப்பற்றும் கலவரத் திட்டத்தை இப்போதைக்கு ஒத்திப் போட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்... அப்படியானால், திரும்பவும் தாயகத்துக்கு ஆபத்து இருக்கிறது என்கிறீர்களா?’’
‘‘ரத்தக்களறியை ஏற்படுத்தி எங்கள் இயக்கத் தலைமை யகத்தைக் கைப்பற்ற முதலமைச்சர் கருணாநிதி திட்டம் தீட்டியிருக்கிறார் என்பதை என்னால் சான்றுகளோடு நிரூபிக்க முடியும். மாநகராட்சித் தேர்தல்களை எந்த குண்டர்களை வைத்து நடத்தி முடித்தார்களோ, அதே குண்டர் படையை வைத்துத் தாயகத்தைக் கைப்பற்ற 24&ம் தேதி மதியத்திலிருந்தே முயன்று வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆதாரப்பூர்வமாக வந்து சேர்ந்து விட்டது.
அதன் பிறகுதான் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி இருவருக்கும் இங்குள்ள நிலமையை விளக்கி விரிவான கடிதம் அனுப்பினேன். எங்கள் தொண்டர்களும் அறவழியில் எதையும் சந்திக்க முந்தையநாள் இரவிலிருந்தே தாயகத்தில் கூடத் துவங்கி விட்டார்கள். நானும் இரவு முழுக்கக் கட்சி நிர்வாகிகளுடன் பேசி, மறுநாள் எப்படி கூட்டத்தை நடத்துவது என்பதைப் பற்றி முடிவெடுத்தோம். எங்களின் அந்த வியூகங்களைக் கண்டு அஞ்சியே தாயகத்தைக் கைப்பற்றும் திட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டிருக்கிறார்கள். வெட்டவெளியில் பொட்டல் காட்டில் ஒரே ஒரு கொடியோடு இருந்து கொண்டு கட்சியை நடத்தவும் எங்களுக்குத் தெரியும். வெறும் கட்டடத்தைக் கைப்பற்றுவதால் ம.தி.மு.க. என்கிற இயக்கத்தை அழித்துவிட முடியாது!’’
‘‘உங்களுடைய கடிதத்துக்குப் பிரதமர் மற்றும் சோனியாவின் ரியாக்ஷன் என்ன?’’
‘‘நான் அனுப்பிய கடிதம் பிரதமர் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவர் கொல்கத்தாவில் நடந்த ஒரு அரசு விழாவில் இருந்தார். கடிதத்தை பிரதமர் படித்து விட்டார் என்ற தகவலை அவரது உதவியாளர் எனக்குத் தெரிவித்தார். அதேபோல் சோனியா அவர்களும் படித்து விட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. இருவரிடமிருந்தும் எனக்கு வந்த தகவல் என்னவென்றால், ‘ஒரு கட்சியை உடைப்பது, அதன் அலுவலகத்தைக் கைப்பற்றுவது என்பது அநாகரிகமான, பொறுத்துக் கொள்ள முடியாத செயல்’ என்பதுதான். என்னிடம் இந்தச் செய்தியை சேர்ப்பித்த கையோடு, எனக்கு எதிரானவர்களுக்கும் சோனியா அவசர எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதனால்தான் என் கட்சி அலுலகத்தின் மீதும், என் மீதும் நடக்க விருந்த குண்டர்படை தாக்குதல் தவிர்க்கப்பட்டி ருக்கிறது. என் கட்சியும், உயிரும் தப்பியிருக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக