வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

சீமானின் அரசியல் கேள்விகுறி? தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும்தான் பெரிய கட்சிகள் .. மீண்டும் நீருபித்த வேலூர் ...


A Sivakumar : நோட்டாவை வென்ற சீமானை வாழ்த்துவோம்!.
நாம் தமிழர் - 26995
நோட்டா - 9417
வித்தியாசம் - 17578
தும்பிகளுக்கு ஒரே ஒரு செய்தி தான்.
பதிவான 10 லட்சம் வாக்குகளில் திமுகவும், அதிமுகவும் பெற்றது 9.62 லட்சம் வாக்குகள்.
சுமார் 96 சதவிகித வாக்குகளை திராவிட கட்சிகள் பெற்று இருக்கிறது. அதாவது கூட்டணி கட்சியான பாஜகவை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்க கூட தைரியமில்லை அதிமுகவுக்கும், ஏ.சி.சண்முகத்துக்கும்.
அப்படியான நிலையில் நீங்க சும்மா மைக்கை பிடிச்சிக்கிட்டு தொண்டை தண்ணி வத்தும் அளவுக்கு திராவிடத்தை எதிர்ப்பதால் பயனில்லை.
தமிழ்நாடு ஒரு சமத்துவமான மாநிலம், அமைதியும் சகோதரத்துவமும் நிறைந்த மாநிலம். இங்க நீங்க தமிழர்களுக்குள் பிரிவினைவாதம் பேசினால் காலத்துக்கும் இந்த ஒற்றை இலக்க சதவிகிதம் தான். மக்கள் உங்களை ஏற்கவே மாட்டார்கள்.
நீங்க வளரும் என்றால் எங்களை விட அதிகமாக, தீவிரமாக, மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் ஆரியத்தை, அதன் ஆத்திகத்தை எதிர்க்கனும்.

அதற்கு ஒரு நாளும் சீமான் தயாரில்லை என்பதை இந்நேரம் அவருடைய இன்றைய பேட்டி உங்களுக்கு தெளிவாக புரியவச்சிருக்கனும்.
புரியலன்னா காசும் இளமையும் பத்திரம். இரண்டுமே போனா திரும்ப வராது!!!

கருத்துகள் இல்லை: