Rajan Kurai Krishnan : காஷ்மீர் உரிமைகளுக்காக தி.மு.க குரல் கொடுப்பதும்,
அ.இ.அ.தி.மு.க மைய அரசினை ஆதரித்து நிற்பதும் தற்செயலானது அல்ல.
தி.மு.க, ஆ.இ.அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் வரலாற்று முரண்களின் வெளிப்பாடுகளாகக் கணித்து ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு முக்கியமான கருதுகோள் ஒன்றை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் Double Articulation of Sovereignty என்ற
பெயரில் Dravidianism என்ற தலைப்பில் நானும், நண்பர் Ravindran
Sriramachandran உம் தொகுத்த ஆகஸ்ட் 2018 செமினார் இதழில் எழுதியுள்ளேன்.
அந்த கருதுகோள் இதுதான்:
தி.மு.க இந்திய ஐக்கியத்தினுள் மாநில அடையாளத்தை, சுயாட்சியை வலியுறுத்திய வரலாற்றுப் போக்கின் வடிவம்.
அ.இ.அ.தி.மு.க மாநில அடையாளத்திலிருந்து, இந்திய ஐக்கியத்தை வலியுறுத்திய எதிர்திசை வரலாற்றுப் போக்கின் வடிவம்.
இதையொட்டித்தான் பல்வேறு அம்சங்களிலும், ஆட்சியின் தன்மை, கட்சியின் தன்மை, கலாசார முன்னெடுப்புகள் போன்றவற்றிலும் முரண்பட்ட வெளிப்பாடுகள் நிகழ்கின்றன என்பதை அவதானிக்க முடியும்.
சிந்தனையாளர்கள், சுதந்திரவாதிகள், பல இடதுசாரி அறிவுஜீவிகள் எல்லாம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற மனிதர்களெல்லாம் வரலாற்றின் வெளிப்பாடா என்று மேட்டிமைப் பார்வை கொள்வதால் தமிழக வரலாற்றின் அகில இந்திய முக்கியத்துவம் உணரப்படாமலேயே போகிறது.
அவர்களை தனிநபர்களாக கணித்து கிசுகிசு எழுதும் விருப்பத்தைத் தாண்டி அறிவுலகம் பயணிக்க நினைப்பதில்லை.
பூனைகள் கண்களை மூடுவதால் உலகம் இருளுவதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக