.nakkheeran.in - santhosh :
முன்னாள்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்(67) உடல் நலக்குறைவால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது காலமானார். மத்திய
அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஹர்ஸ்வர்தன் ஆகியோர் டெல்லி எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
>
கடந்த ஆண்டே உடல்நலக் குறைவு காரணமாக அவர்
அரசியலில் இருந்து விலகி இருந்தார். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சை செய்து கொண்ட அவர் பின்னர் தீவிர அரசியலில் இருந்து
ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது காலமானார்.
ஏழு முறை மக்களவையில் எம்பியாக பதவி வகித்த சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்திக்குப் பிறகு 2 ஆவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக