தினமலர்: இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான தூதரக உறவுகளை முறித்து கொண்ட பாக். தனது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை இந்தியா ரத்து செய்ததையடுத்து பாக். தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ளுதல், இந்திய தூதரை திருப்பி அனுப்புதல் போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதை தொடர்ந்து செப். 5-ம் தேதி வரை பாக். வான்வழி பாதையை மூட விடவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய விமானங்கள் பாக். வான்வழி பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக